டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக, காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளி மற்றும் மன்பஉல் பரக்காத் சங்கம் ஆகிய இடங்களில், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் - பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகம், இன்று (26.11.2015 வியாழக்கிழமை) 09.00 மணியளவில் துவங்கியது.
சிறிய - பெரிய குத்பா பள்ளிகளின் செயற்குழு உறுப்பினர் ஜவாஹிர் வினியோகத்தைத் துவக்கி வைத்தார். அப்பகுதியை உள்ளடக்கிய - காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன் முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்றத் துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி ஆகியோர் இணைப்பணியாற்றினர்.
இம்முகாமில், அப்பகுதியைச் சேர்ந்தோர் உள்ளிட்ட ஆண்களும் - பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து, நிலவேம்புக் குடிநீரைப் பெற்றுப் பருகிச் சென்றனர்.
தகவல் & படங்கள்:
A.K.முஹம்மத் முகைதீன்
(06ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர்)
சிறிய குத்பா பள்ளி தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
மன்பஉல் பரக்காத் சங்கம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக! |