காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், மழைக்கால சித்த மருத்துவ சிறப்பு முகாம் இன்று 11.00 மணியளவில், நடைபெற்றது.
மருத்துவர் ஜெஃப்ரீஸ் வரவேற்றுப் பேசியதோடு, நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். மழைக்காலத்தில் பரவும் தொற்றுநோய்கள், அவற்றைத் தடுப்பதற்கான மற்றும் வருமுன் காப்பதற்கான வழிமுறைகள் குறித்து தலைமை மருத்துவர் ராணி விளக்கிப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவமனையின் புறநோயாளிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீரை வழங்கினார். அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து, அதைப் பெற்றுப் பருகினர்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மருத்துவமனை செவிலியர், அலுவலர்கள், ஊழியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
அரசு மருத்துவமனை தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக! |