எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் நகரில் தொடர்ந்து ஆவணப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
நவம்பர் 29 (நேற்று) அன்று மாலை காயல்பட்டினம் பிரதான சாலையில் அமைந்துள்ள துஃபைல் வணிக வளாக அரங்கில், எழுத்து மேடை மையம், தமிழ்நாடு அமைப்பின் மூன்றாம் திரையிடல் நிகழ்வாக “ லீலாவதி “ ஆவணப்படம் திரையிடப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக எஸ்.கே. ஸாலிஹ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பின்னர் பிரபல ஆவணப்பட இயக்குனர் ஆர்.பி.அமுதனின் “லீலாவதி “ஆவண திரைப்படம் தொடர்பான அறிமுகத்தை எழுத்தாளரும், எழுத்து மேடை மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான சாளை பஷீர் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து லீலாவதி ஆவணப்படம் திரையிடப்பட்டது.
நகரின் பல பகுதிகளில் இருந்து சமுக ஆர்வலர்கள் இத்திரையிடலில் கலந்துக்கொண்டனர்.
திரையிடலின் நிறைவில் - இந்த ஆவணப்படத்தை குறித்து - சாளை பஷீர் கூடுதல் தகவல் வழங்கினர்.
லீலாவதி - மதுரை மாநகராட்சியின் மன்ற உறுப்பினராக 1996ம் ஆண்டு தேர்வானார். மக்கள் நலனுக்காக நேர்மையாக போராடி வந்த இவர், பொறுப்பிற்கு வந்து சில மாதங்களில் கொலை செய்யப்பட்டார். [முழு விபரம் தனி செய்தியாக வெளியிடப்படும்].
தொடர்ந்து பார்வையாளர்களுடன் லீலாவதி ஆவணப்படம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இறுதியில் நன்றி நவிலலுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
புகைப்படங்களில் உதவி:
'தமிழன்' முத்து இஸ்மாயில்
|