நெல்லை மாவட்டம் பணகுடி அருகில், மகேந்திரகிரியிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு (Indian Space Research Organisation - ISRO) காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பப் பயணம் மேற்கொண்டு, ஏவுகணை தயாரிப்பு, பரிசோதனை உள்ளிட்டவை குறித்து விளக்கங்களைப் பெற்று வந்துள்ளனர். இதுகுறித்து, அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவ-மாணவியர், நெல்லை மாவட்டம் பணகுடி அருகில், மகேந்திரகிரியிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு (Indian Space Research Organisation - ISRO) தொழில்நுட்பப் பயணமாக வெவ்வேறு நாட்களில் சென்று வந்துள்ளனர்.
19.11.2015 அன்று, பள்ளியின் முதல்வர் டி.ஸ்டீஃபன் உட்பட, 4 ஆசிரியர்கள், ஓர் ஆசிரியை, 54 மாணவர்கள் ஒரு பேருந்திலும், 27.11.2015 அன்று 3 ஆசிரியையர், 25 மாணவியர் ஒரு பேருந்திலும் என, இவ்விரு நாட்களிலும், பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டீ.சுலைமான் ஒருங்கிணைப்பில் அவர்கள் சென்றனர்.
ராக்கெட் ஏவுகணை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், Engine, Fuel Test ஆகியன இங்கு செய்யப்படுகிறது. Cryo Engine, Cryogenic Engine, Vikas Engine போன்ற என்ஜின்களும் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் இதுநாள் வரை தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளின் மாதிரிகள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து படக்காட்சிகளுடன் மாணவ-மாணவியருக்கு விளக்கப்பட்டது.
தயாரிப்பு இடம், சோதனை செய்யப்படும் இடம் ஆகியவற்றையும் மாணவ-மாணவியர் பார்த்து வந்தனர். இப்பயணம் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
(துணைச் செயலாளர், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி)
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
|