இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழுக் கூட்டத்தில், மாநிலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநில பொதுச் செயலாளராக கே.ஏ.எம்.முஹம்ம்த அபூபக்கர், மாநில செயலாளர்களுள் ஒருவராக காயல் மகபூப், துணைச் செயலாளர்களுள் ஒருவராக எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ ஆகிய காயலர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து, அக்கட்சியின் மாநில தலைமையத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பேரியக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நா மாநில புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. மாநில தலைவராக பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் மாநில பொதுச் செயலாளராகவும், எம்.அப்துல் ரஹ்மான் முதன்மை துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில புதிய பொதுக்குழு கூட்டம் 24.11.2015 செவ்வாய் காலை 11 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரோஸன் மஹாலில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 49 மாவட்ட அமைப்புகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் மாநில பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் 510 பேர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 31.12.2019 வரையிலான அடுத்த நான்கு ஆண்டுகளுக்குரிய புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள்:
புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு:-
1. தலைவர்-பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் (எக்ஸ்.எம்.பி.,)
2. பொதுச்செயலாளர்-கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்
3. பொருளாளர்-எம்.எஸ்.ஏ. ஷாஜகான்
துணைத்தலைவர்கள்:- 1. எம். அப்துல் ரஹ்மான் எக்ஸ்.எம்.பி.,
(முதன்மை துணைத்தலைவர், மக்கள் தொடர்பு, முஸ்லிம் லீக் செய்தி தொடர்பாளர், காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப்பு மற்றும் முஸ்லிம் யூத் லீக் பொறுப்பு)
2. எஸ்.எம். கோதர் முகைதீன் (எக்ஸ்.எம்.எல்.ஏ,)
3. சேலம் எம்.பி. காதர் ஹுசேன்
4. லால்பேட்டை தளபதி மௌலானா ஏ. ஷபீகுர் ரஹ்மான்
5. அதிரை எஸ்.எஸ்.பி. நஸ்ருதீன்
6. திருப்பூர் பி.எஸ். ஹம்சா
7. சென்னை எஸ்.எம். கனிசிஸ்தி
மாநில செயலாளர்கள்:-
1. நெல்லை அப்துல் மஜீத்-அமைப்புச் செயலாளர்
2. காயல் மகபூப்-கொள்கை பரப்பு செயலாளர்
3. ஆம்பூர் எச். அப்துல் பாசித் (எக்ஸ்.எம்.எல்.ஏ.) மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு
4. வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன், சட்டப்பணி மற்றும் மின்னணு ஊடக ஆலோசகர்
5. ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான்-கல்விப்பணி செயலாளர்
6. மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில்-சமூக நலப்பணி
7. சென்னை கே.எம். நிஜாமுதீன்-வக்ஃபு விவகாரம் மற்றும் ஹஜ் பணிகள்
துணைச்செயலாளர்கள்:-
1. தென்காசி வி.டி.எஸ்.ஆர். முஹம்மது இஸ்மாயில்-மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு
2. திண்டுக்கல் ஷபீர் அஹமது-வக்ஃபு விவகாரம் மற்றும் ஹஜ் பணிகள்
3. ஆப்பனூர் ஆர். ஜபருல்லாஹ்-உள்ளாட்சி மன்றத் தொடர்புப் பணிகள்
4. காயல்பட்டினம் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ-சமூக நலப்பணி
5. கூடலூர் எம்.ஏ. ஸலாம்- அமைப்புப்பணி
6. மேட்டுப்பாளையம் அக்பர் அலி-கொள்கை பரப்பு
7. மதுரை டாக்டர் என். நவீன் தாரிக்-கல்விப்பணிகள்
சார்பு அணிகள்: முஸ்லிம் யூத் லீக்:-
1. பள்ளபட்டி எம்.கே. முஹம்மது யூனுஸ்-மாநில செயலாளர்
மாநில இணைச்செயலாளர்கள்
1. பாம்புகோவில் சந்தை செய்யது பட்டாணி
2. கடையநல்லூர் எஸ்.கே.எம். ஹபீபுல்லாஹ்
3. கோட்டகுப்பம் அன்வர் பாஷா
4. ஆயப்பாடி அபூபாரீஸ்
முஸ்லிம் மாணவர் பேரவை:-
1. பழவேற்காடு அன்சாரி-மாநில செயலாளர்
மாநில இணைச்செயலாளர்கள்
1.புளியங்குடி முஹம்மது அல் அமீன்
2. லால்பேட்டை ஏ.எஸ். அஹமது
3. திருச்சி ஏ.எச். அன்சர் அலி
4. வாணியம்பாடி எஸ்.எச். முஹம்மது அர்ஷத்
சுதந்திர தொழிலாளர் யூனியன்:-
1. திருச்சி ஜி.எம். ஹாஷிம்-மாநில செயலாளர்
மாநில இணைச்செயலாளர்கள்
1.குடியாத்தம் என்.பி. வாஹித்
2.திருப்பூர் ஐ.எம். ஜெய்னுல் ஆபிதீன்
3.சேலம் நசீர் பாஷா
4.அய்யம்பேட்டை பைசல்
மகளிர் லீக்:-
1. பேராசிரியை மதுரை ஏ.கே. தஷ்ரிஃப் ஜஹான்-மாநில செயலாளர்
2. வழக்கறிஞர் சென்னை ஆயிஷா நிஷா-மாநில இணைச்செயலாளர்
மின்னணு ஊடகப் பிரிவு:-
1. ஆடுதுறை எம்.ஜே.எம். ஜமால் முஹம்மது இப்ராஹிம்- ஒருங்கிணைப்பாளர்
துணை ஒருங்கிணைப்பாளர்
1. மேலப்பாளையம் பி.எம். அப்துல் ஜப்பார்
2. கோம்பை ஜெ. நிஜாமுதீன்
கௌரவ ஆலோசகர்கள்:-
1. அப்ஸலுல் உலமா தைக்கா சுஐபு ஆலிம்
2. திருச்சி எழுத்தரசு ஏ.எம். ஹனீப்
3. கொளத்தூர் மௌலவி சாகுல் ஹமீது ஜமாலி
4. கோவை எல்.எம். அப்துல் ஜலீல்
5. சென்னை மௌலவி எஸ்.எம். முஹம்மது தாஹா மிஸ்பாஹி
6. நெல்லை மௌலவி டி.ஜே.எம். சலாஹூதீன் ரியாஜி
7. வாணியம்பாடி காகா முஹம்மது ஜூபைர்
8. ஈரோடு மௌலவி உமர் பாரூக் தாவூதி
9. சென்னை மௌலவி ஓ.எம். முஹம்மது இல்யாஸ் காசிமி
10. குளச்சல் பேராசிரியர் சாகுல் ஹமீது
11. திருச்சி எம்.ஐ.இ.டி. முஹம்மது யூனுஸ்
12. காயல்பட்டினம் வாவு செய்யது அப்துல் ரஹ்மான்
13. மேலப்பாளையம் வி.எஸ்.டி. சம்சுல் ஆலம் (எக்ஸ்.எம்.எல்.ஏ.,)
14. திண்டுக்கல் மௌலவி கே.கே.ஓ. சுலைமான் மன்பஈ
15. திருச்சி ஏ. பஷீர் அஹமது நவ்ஷாத் (ஆற்காடு என்டோமென்ட்)
16. காயல்பட்டினம் வாவு சித்தீக்
17. புரசை எம். சிக்கந்தர்
18. நாகூர் கவிஞர் இஸட் ஜபருல்லாஹ்
19. நாகூர் ஆலியா ஷேக் தாவூது மரைக்காயர்
20. வாணியம்பாடி ஏ.ஜி. நாசர் அஹமது
21 . கீழக்கரை சீனா தானா செய்யது அப்துல் காதர்
22. கீழக்கரை ஆலிம் செல்வன் சம்சுதீன்
23. சென்னை எஸ்.டி. கூரியர் நவாஸ் கனி
24. பல்லாவரம் முஹம்மது பேக்
25. கோட்டகுப்பம் டாக்டர் இக்பால் பாஷா
26. ஈரோடு ஜி. தாஜ் முகைதீன்
27. குத்தாலம் லியாகத் அலி
28. சிட்டிசன் அப்துல் மஜீத்
29. முஹம்மது பந்தர் முஹம்மது பாரூக்
30. கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது
ஒழுங்கு நடவடிக்கை குழு:-
1. பள்ளபட்டி எம்.ஏ. கலீலூர் ரஹ்மான் (எக்ஸ்.எம்.எல்.ஏ.,)
2. கம்பம் ஏ. அப்துல் ரவூப்
3. தருமபுரி ஏ. அன்வர் பாஷா
சொத்து பாதுகாப்பு குழு:-
1. திருச்சி வழக்கறிஞர் ஜி.எஸ்.ஏ. மன்னான்
2. சென்னை கே.டி. கிஸர் முஹம்மது
3. லால்பேட்டை ஏ.ஆர். அப்துல் ரஷீது
தலைமை நிலைய பேச்சாளர்கள்:-
1. திருப்பத்தூர் நாவலர் கௌஸ் முகைதீன்
2.கிளியனூர் கவிஞர் அப்துல் அஜீஸ்
3. வேலூர் கவிஞர் வி.எஸ். பஸ்லுல்லாஹ்
4. கொள்ளிடம் ரஷீத்ஜான்
5. மதுரை மௌலவி ராஜா ஹுசைன் தாவூதி
6. பனைக்குளம் செய்யது முஹம்மது ஆலிம்
7. சென்னை மௌலவி கே.எஸ். சாகுல் ஹமீது ரஹ்மானி
8. சேலம் பி.ஏ. ஷிஹாபுதீன்
9. தென்காசி முஹம்மது அலி
தலைமை நிலைய பாடகர்கள்:-
1. முகவை எஸ்.ஏ. சீனி முஹம்மது
2. தேரிழந்தூர் தாஜுதீன்
3. சென்னை கவிஞர் ஏ. ஷேக் மதார்
மேற்கண்ட பொறுப்புகள் தவிர மாநில அரசியல் ஆலோசனைக்குழு மற்றும் உயர்மட்ட குழு தேசிய கவுன்சில், தேசிய செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரம் மாநில தலைவர் அவர்களுக்கு வழங்குவதென இக்கூட்டம் முடிவு செய்கிறது.
அரசியல் தீர்மானங்கள்:
1. வெள்ள நிவாரணம்
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு 169 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் உடமைகளை இழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு பாதிக்கப்பட்டோரின் துயரத்தில் பங்கேற்கிறது. மத்திய மாநில அரசுகள் தங்களின் மெத்தன போக்கை கைவிட்டு அவதியுற்றுள்ள மக்கள் அனைவருக்கும் நிவாரண பணியை போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்திட வேண்டுகோள் விடுக்கிறது.
இதுவரை ஏற்பட்ட சேதம் ரூபாய் 8,481 கோடி என்றும் முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையை தொடர்ந்து பிரதமர் முதற்கட்டமாக ரூபாய் 939 கோடியே 63 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த இழப்பீடு கணக்கீடும் மத்திய அரசிடம் முதல்வர் விடுத்த தொகையும், மத்திய அரசு அறிவித்த முதற்கட்ட நிவாரணமும் மிகவும் குறைவு ஆகும். பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் மக்களுடைய நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் கால ஆதாயங்களை எதிர்பார்த்து காத்திராமல் உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஓடோடி சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் புரிந்து உணவு, உடை வழங்கி நிவாரண பணியில் முழு வீச்சுடன் ஈடுபட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல் வீரர்களை இக்கூட்டம் பாராட்டுகிறது.
2. தமிழக சட்டப்பேரவை தேர்தல்
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மதவெறி சக்திகளுக்கு மக்கள் அளித்துள்ள பாடம் மதசார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு ஆறுதலை தந்துள்ளதோடு, தேர்தல் முடிவு, ஜனநாயக இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அருமையான பாடத்தையும் கற்றுத்தந்துள்ளது.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக தலைமையிலான அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து பங்கு பணியாற்றும். இத்தேர்தலில் ஆளும் அஇஅதிமுக அரசை வீழ்த்த சமய சார்பற்ற, ஜனநாயக, சமூக நீதி கொள்கையில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.
இயக்க தீர்மானங்கள்:
1. 15 அம்ச கோரிக்கை பிரகடனம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு எடுத்த முடிவின் அடிப்படையில், இந்திய குடி மக்களின் தனித்தன்மைகளை பாதுகாத்தல், மதவெறி-பயங்கர வாதத்திற்கு பழியாகாமல் பாதுகாத்தல் , பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தும் இந்திய அரசியல் சாசன 44வது பிரிவை ரத்து செய்யக் கோருதல், கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்துதல், தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள வழிபாட்டுத்தளங்களில் வழிபாடு நடத்த கோருதல், சட்ட விரோ ஆக்கிரமிப்புகளிலிருந்து வஃக்பு சொத்துக்களை மீட்டு அதை ஏழை முஸ்லிம்களுக்கு பயன்படுத்துதல், வட்டியில்லா வங்கி முறையை அமல் படுத்துதல்,
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கு குறையாத பதவியில் முஸ்லிம்களை நியமித்தல், போதை பொருட்களை முற்றிலும் தடை செய்ய பூரண மது விலக்கை அமல் படுத்துதல், விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை அறிமுகப்படுத்துதல், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை, மத்திய-மாநில அரசுகளால் நடத்தப்படும் அவரவர் தாய் மொழியில் எழுதிட அனுமதிக்க வேண்டுதல், அனைத்து மாநிலங்களிலும் சிறுபான்மையினர் ஆணையங்கள் , நிதி வளர்ச்சி வாரியங்கள் நிறுவிட வேண்டுதல், காஜிகளின் திருமண பதிவேடுகளுக்கு சட்ட அங்கீகாரம் அளித்தல், தேர்வு குழுக்களில் குறைந்த பட்சம் ஒரு முஸ்லிம் பிரதிநிதியாவது இடம் பெறச் செய்தல் ஆகிய 15 அம்ச கோரிக்கை பிரகடனத்தை தமிழகம் முழுவதும் விளம்பர படுத்தவும், பரப்புரை செய்யவும் அனைத்து மாவட்ட ,பிரைமரி அமைப்புகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
2. நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாக்கள்
நானிலம் போற்றும் நாயகம் நற்குணத்தின் தாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உதய தினத்தை உலக நாடுகள் பலவும் இந்திய அரசும், தமிழக அரசும் விடுமுறை நாளாக அறிவித்து பெருமைப்படுத்தியுள்ளன.இந்த ஆண்டு தமிழகத்தில் டிசம்பர் 23 அல்லது 24 ம் தேதி மீலாதுந் நபி தினம் அனுசரிக்கப்பட உள்ளது.
இந்நந்நாளையொட்டி தமிழகத்தின் ஊர்கள் தோறும் சமூக விழாவாக நடத்தி மார்க்க மேதைகள் சகோதார சமுதாய அறிஞர் பெருமக்கள் கல்வியாளர்களை கொண்டு சிறப்புச் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யவும், மருத்துவ மனைகளுக்கு சென்று நேயாளிகளுக்கு உதவி புரிதல் சிறைக் கைதிகளுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட சமூக நலக்காரியங்களில் ஈடுபடவும், சமுதாயத்தவர்களையும் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
அத்துடன் இந்நாளையொட்டி தமிழகத்தில் 1 லட்சம் இளைஞர்கள் ரத்ததானம் செய்வதற்கு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி, மாணவர் பேரவையினருக்கு இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.
3. மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆண்டுதோறும் நடத்தி வரும் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாட்டை இந்த ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10 அன்று விழுப்புரத்தில் நடத்துவது என்றும், அம்மாநாட்டில் முன்மாதிரி மஹல்லாக்களை தேர்வு செய்து விருது வழங்கி பாராட்டுவது என்றும், மஸ்ஜித், மதரஸா உருவாக்கி கொடுக்கும் சமுதாய பெருந்தகைகளை விருது வழங்கி கௌவிப்பது என்றும், பள்ளிவாசல் உருவாவதற்கு துணை புரிந்த சகோதர சமுதாயங்களை சார்ந்தோரை அழைத்து பாராட்டி கௌரவிப்பது என்றும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.
அத்துடன் இம்மாநாட்டின் நிறைவின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது சாகிப் எம்.பி., கேரள மாநில தலைவர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள், திமுக தலைவர் கலைஞர் மற்றும் பொருளாளர் மு.க.ஸ்டாலின், தோழமை கட்சிகளின் தலைவர்களை உரையாற்ற அழைப்பது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மாநாட்டுக்கான நிதி திரட்டுவதற்கு விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ்.எம். அமீர் அப்பாஸ் தலைமையில் குழு அமைப்பது என்றும் வரவேற்பு குழு கட்டணமாக ரூ. ஆயிரம் நிர்ணயம் செய்வது என்றும் முடிவு செய்யப்படுகிறது.
4. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பயிலக மண்டல மாநாடுகள்
தமிழ்நாட்டின் 32 வருவாய் மாவட்டங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாக வசதிக்காக 49 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்கள் மிகச்சிறப்பாக பணியாற்ற பயிலக மண்டல மாநாடுகள் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
இம்மாநாடுகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாறு, சட்ட விதிகள், அரசியல் மார்க்க சமுதாய சேவைகள், மக்கள் மன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி மன்றங்களின் பணிகள், தேர்தல் ஆணைய சட்ட விதிகளும் கடமைகளும், சகோதர சமுதாயங்களுடனும், பிற முஸ்லிம் அமைப்புகளுடனும், பிற அரசியல் கட்சிகளுடனும், அனுசரிக்க வேண்டிய உறவுகள், தேர்தல் கூட்டணி கொள்கைகள் உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அனைத்து அம்சங்கள் பற்றியும் விளக்கமும், பயிற்சியும் அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு இம்மாநாடுகளை நடத்த கீழ்க்காணும் 10 மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன.
1. திருநெல்வேலி மண்டலம்: (திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள்)
2. இராமநாதபுரம் மண்டலம்: (இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்)
3.மதுரை மண்டலம்: (மதுரை, திண்டுக்கல், தேனி)
4.கோவை மண்டலம்: (கோவை, திருப்பூர் நீலகிரி)
5. சேலம் மண்டலம்: (சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி
6. வேலூர் மண்டலம்: வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி)
7. சென்னை மண்டலம்: (சென்னை திருவள்ளூர்)
8. விழுப்புரம் மண்டலம்: (விழுப்புரம், கடலூர் காஞ்சிபுரம்)
9. திருச்சி மண்டலம்: (திருச்சி ,பெரம்பலூர், கரூர்)
10. தஞ்சாவூர் மண்டலம்: (தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம்)
இந்த பயிலக மண்டல மாநாடுகளை 2015 டிசம்பர் முதல் 2016 பிப்ரவரிக்குள் நடத்தி முடிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |