காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணியின் (YUF) பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கூட்ட நிகழ்வுகள் குறித்து, அதன் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எமது இளைஞர் ஐக்கிய முன்னணியின் பொதுக்குழுக் கூட்டம், 29.11.2015. ஞாயிற்றுக்கிழமையன்று 20.00 மணிக்கு, நிறுவனர்களுள் ஒருவரான எஸ்.இ.முஹம்மதலீ ஸாஹிப் (டீ.எம்.) தலைமையில், முன்னணியின் புகாரீ நினைவு நூலக அரங்கில் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். முதல் நிகழ்வாக, சிறிய குத்பா பள்ளிக்கு புதிய கத்தீபாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீயைப் பாராட்டி, கூட்டத் தலைவர் அவருக்கு சால்வை அணிவித்தார்.
தொடர்ந்து, முன்னணியின் கடந்த கால செயல்பாடுகள் குறித்தும், வருங்கால செயல்திட்டங்கள் குறித்தும், செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தனது வரவேற்புரையில் விளக்கிப் பேசினார்.
அதனடிப்படையில், கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. நிறைவில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - புதிய நிர்வாகிகள் தேர்வு:
இளைஞர் ஐக்கிய முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் பின்வருமாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
எஸ்.இ.முஹம்மதலீ ஸாஹிப் (டீ.எம்.)
துணைத்தலைவர்:
நஹ்வீ எம்.கே.அஹ்மத் முஹ்யித்தீன்
பொதுச் செயலாளர்:
எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
இணைச் செயலாளர்கள்:
(1) மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ
(2) ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ்
மார்க்கத் துறை செயலாளர்கள்:
(1) மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ
(2) மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ
(3) மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ
செயற்குழு உறுப்பினர்கள்:
(01) என்.எஸ்.நூஹ் ஹமீத்
(02) சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் (முத்து ஹாஜி)
(03) ஒய்.எஸ்.ஃபாரூக்
(04) கே.எம்.செய்யித் அஹ்மத்
(05) எம்.ஏ.அஹ்மத் லெப்பை
(06) எம்.எச்.ஸெய்யித் முஹம்மத் ஸாஹிப்
(07) சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் முஹம்மத் ஸாஹிப்
(08) எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம்
(09) எம்.இ.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
(10) என்.டீ.ஷெய்கு மொகுதூம்
நிர்வாக வசதியைக் கருதி, தேவைப்படும் இதர பொறுப்பாளர்களை நியமனம் செய்திட, பொதுச் செயலாளருக்கு கூட்டம் முழு அதிகாரமளித்தது. அதனடிப்படையில், அவரால் தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள்:-
பொதுநலத் துறை செயலாளர்கள்:
(1) கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப்
(2) குளம் எம்.ஐ.மூஸா நெய்னா
(3) எம்.ஏ.கே.ஜைனுல் ஆப்தீன்
கவுரவ ஆலோசகர்கள்:
(1) எம்.முஹம்மத் இஸ்மாஈல்
(2) எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல்
(3) எம்.என்.எல்.ஸுலைமான் லெப்பை
அலுவலகப் பொறுப்பாளர்:
கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத்
விளையாட்டுத் துறை செயலாளர்கள்:
(1) எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன்
(2) எஸ்.எம்.ஃபைஸல்
(3) ஜெ.ஏ.அப்துல் ஹலீம்
விளையாட்டுத் துறை வளர்ச்சிப் பொறுப்பாளர்கள்:
(1) எஸ்.எச்.ஷாஹுல் ஹமீத்
(2) ஏ.எஃப்.முஹம்மத் ஹுஸைன் காஜா
(3) எம்.ஏ.சி.ஸுஹைல் இப்றாஹீம்
விளையாட்டுத் துறை ஆலோசகர்கள்:
(1) எஸ்.ஐ.ஷாஹுல் ஹமீத் (உ.ம.)
(2) ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல்
நூலகத் துறை பொறுப்பாளர்கள்:
(1) எம்.எஸ்.முஹம்மத் லெப்பை
(2) என்.டீ.ஷெய்கு மொகுதூம்
கல்வித் துறை பொறுப்பாளர்கள்:
பாவலர் ஒய்.எஸ்.ஷெய்கு அப்துல் காதிர்
ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப்
தகவல் தொடர்பு பொறுப்பாளர்கள்:
(1) எம்.இ.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
(2) ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.ஈஸா ஜக்கரிய்யா
(3) எஸ்.ஐ.ரஃபீக்
தீர்மானம் 2 - கூட்ட கால அளவு:
முன்னணியின் செயற்குழுக் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு 4 கூட்டங்களும், பொதுக்குழுக் கூட்டம் ஆண்டுக்கு ஒரு முறையும் கூடுவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - சந்தா தொகை:
முன்னணி உறுப்பினர் ஆண்டுச் சந்தா தொகை ரூபாய் 50 என்பதை உயர்த்தி, ரூபாய் 100 என நிர்ணயிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - அரசுப் பதிவு:
இளைஞர் ஐக்கிய முன்னணியை அரசுப்பதிவு செய்திடவும், அப்பணிகளைக் கவனிப்பதற்காக தனிக்குழு அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 5 - பராமரிப்புப் பணிகள்:
இளைஞர் ஐக்கிய முன்னணி நூலகம், அலுவலகம், வெளி வளாகம், அதன் பராமரிப்பில் இயங்கும் ஈக்கியப்பா தைக்கா மைதானம் ஆகியவற்றுக்குத் தேவைப்படும் பராமரிப்புப் பணிகளைச் செய்திட பொதுச் செயலாளருக்கு அதிகாரமளித்து தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றியுரையைத் தொடர்ந்து, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், முன்னணியின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் ஐக்கிய முன்னணி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |