காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் நம் வானம் என்ற புதிய பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் சேவை பட்டியலில் (MENU) அது
சேர்க்கப்பட்டுள்ளது.
நம் வானம் பகுதி - தற்போது 7 சேவைகளை கொண்டுள்ளது. அதில் இரண்டு - வானிலை (WEATHER) சம்பந்தப்பட்டவை.
(1) தற்போதைய செயற்கைக்கோள் படம்
(2) அடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு
இந்த இரண்டு சேவைகளும் - இந்திய வானிலை மையத்தின், இணையதளங்களில் இருந்து பெறப்படுபவை. எனவே காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் உள்ள அந்த பக்கங்கள் - உடனுக்குடன் - தானாகவே புதுப்பிக்கபடுகின்றன.
(1) தற்போதைய செயற்கைக்கோள் படம்
இந்த பகுதியில் - INSAT - 3D செயற்கைக்கோளின் படம், சுமார் 1 மணி நேரத்திற்கு ஒரு முறை, தானாக புதுப்பிக்கப்படும்.
(2) அடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு
இந்த பகுதியில், தூத்துக்குடி மாவட்டத்திற்கான, அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை கணிப்பு இடம்பெறுகிறது. இதில் அடுத்த ஐந்து நாட்களில்
எதிர்ப்பார்க்கப்படும் தினசரி மழை அளவு, மேக மூட்டம் உட்பட பல்வேறு தகவல்கள் இடம்பெறும்.
இந்த இரு பக்கங்கள் மூலம், காயல்பட்டினம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்திற்கான வானிலை நிலையினை - 24 மணி நேரமும் அறிந்திடலாம்.
[தொடரும்]
|