காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் நம் வானம் என்ற புதிய பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் சேவை பட்டியலில் (MENU)
அது சேர்க்கப்பட்டுள்ளது.
நம் வானம் பகுதி - தற்போது 7 சேவைகளை கொண்டுள்ளது. அதில் இரண்டு - வானிலை (WEATHER) சம்பந்தப்பட்டவை. ஐந்து
சேவைகள் - வானியல் (ASTRONOMY) சம்பந்தப்பட்டவை.
(1) சூரிய உதயம் / மறைவு கணக்கிட
(2) சந்திர உதயம் / மறைவு கணக்கிட
(3) தற்போதைய காயல் வானம்
(4) சூரியனின் தற்போதைய காட்சி
(5) சந்திரனின் தற்போதைய கட்டம்
வானியல் சம்பந்தமான இந்த ஐந்து சேவைகளில், இரண்டு சேவைகள் - பல ஆண்டுகளாக - இணையதளத்தில்- இடம்பெற்றுள்ளது. அவை - சூரிய உதயம் / மறைவு கணக்கிட மற்றும் சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆகும்.
(1) சூரிய உதயம் / மறைவு கணக்கிட
இந்த வசதி மூலம், காயல்பட்டினத்தின் சூரியன் உதயம், மறைவு, உச்சி வெயில் நேரம், காலை மற்றும் மாலை அந்தி நேரங்களை
அறிந்துக்கொள்ளலாம். இந்த தகவல்களை - வாசகர்கள் விரும்பும் மாதம் மற்றும் ஆண்டினை தேர்வு செய்து - அந்த காலக்கட்டத்திற்கு பெற்று
கொள்ளலாம்.
(2) சந்திர உதயம் / மறைவு கணக்கிட
இந்த வசதி மூலம், காயல்பட்டினத்தின் சந்திர உதயம், மறைவு, பௌர்ணமி, அமாவாசை நேரங்களை அறிந்துக்கொள்ளலாம். இந்த தகவல்களை
- வாசகர்கள் விரும்பும் மாதம் மற்றும் ஆண்டினை தேர்வு செய்து - அந்த காலக்கட்டத்திற்கு பெற்று கொள்ளலாம்.
தொழுகை நேரத்தோடு இணைத்து - மேலும் இந்த இரு சேவைகளின் மூலமான தினசரி தகவல்கள், இணையதளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்
தற்போது வழங்கப்படுகிறது.
இவைகளை தவிர, மேலும் மூன்று புதிய வானியல் தொடர்பான சேவைகளும், இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
(1) தற்போதைய காயல் வானம்
இந்த சேவை மூலம் - தற்போதைய காயல்பட்டினம் வானில் தென்படும் நட்சத்திரங்கள் / கிரகங்கள் விபரங்களை வரைப்படம் மூலம் காணலாம். மேலும் - வாசகர்கள், இதில் உள்ள படிவத்தை பயன்படுத்தி, தாங்கள் விரும்பும் நாள் மற்றும் நேரத்தில், காயல் வானில் தென்படும் நட்சத்திரங்கள் / கிரகங்கள் விபரங்களையும் அறியலாம். அந்த வரைப்படத்தை அச்சிடும் வசதியும் - இந்த சேவையில் - சேர்க்கப்பட்டுள்ளது.
(2) சூரியனின் தற்போதைய காட்சி
SOHO என்ற விண்கலம் - சூரியனை, பல பரிமாணங்களில், 24 மணி நேரமும், படம்பிடித்து வருகிறது. அந்த விண்கலம் அனுப்பும் பலவகையான காட்சிகள், SOHO இணையதளத்தில் இருந்து நேரடியாக பெறப்பட்டு, உடனுக்குடன் காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் - தானாகவே - புதுப்பிக்கப்படுகிறது.
(3) சந்திரனின் தற்போதைய கட்டம்
இந்த சேவை மூலம், சந்திரனின் தற்போதைய கட்டம் (PHASE OF THE MOON) குறித்த விபரங்களை அறியலாம்.
[தொடரும்] |