தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல், வடக்கிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் இம்மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நவம்பர் மாதம் மத்தியிலும், இறுதியிலும் கடுமையான மழை பெய்ததால் இயல்பான வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தை அடுத்து, அதிகமான காயலர்கள் வாழும் ஊர் சென்னை ஆகும். வடசென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளான மண்ணடி, புரசைவாக்கம் போன்ற பகுதிகளில் பெருவாரியான காயலர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் மழை நீர் தேக்கம் காணப்பட்டாலும், நகரின் தென் சென்னை பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு அளவில் இப்பகுதிகளில் இல்லை.
இப்பகுதிகளை தவிர - வேறு பகுதிகளில் வாழும் காயலர்கள் இம்மழையினால் பாதிக்கப்பட்ட தகவல்கள் இதுவரை இல்லை.
இம்மழையினால் காயலர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் குறித்த தகவல்கள், அவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்த தகவல்களை - இணையதள வாசகர்கள் இப்பகுதியில் பதிவு செய்யலாம்.
சென்னை பாரிமுனை பகுதியை தலைமை செயலகத்தோடு இணைக்கும் ரிசர்வ் வங்கி பாலத்தின் இன்றைய காலை காட்சி; காயலர் எம்.எஸ்.சுல்தான் எடுத்த படங்கள்
|