டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு நாடு முழுவதும் நிலவேம்பு கசாயம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து காயல்பட்டினம் நகராட்சி சார்பில், நகரின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு கட்டமாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் வரிசையில், நாளை (04/12) காலை 8 மணி முதல், மொகுதூம் தெருவில் அமைந்துள்ள புதுப்பள்ளியில் நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது.
இம்முகாமில், நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள், மார்க்க அறிஞர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.
தகவல்:
ம.ஜஹாங்கிர் |