தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக, சென்னை நகரமே வெள்ள நீரில் மூழ்கித் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. அங்கு, ஏரிகள் நிரம்பி வழிவதால், சுற்றியிருக்கும் குடியிருப்புகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்கு குடியிருந்தோர் தம் வீட்டு மேற்கூரைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவ்வாறிருக்க, நிவாரணப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அரசு ஒருபுறம் நிவாரணப் பணியில் ஈடுபட, மறுபுறத்தில் பொதுநல அமைப்பினரும் களமிறங்கி நிவாரணப் பணிகளாற்றி வருகின்றனர். சென்னையிலுள்ள பள்ளிவாசல்கள், திரையரங்குகள் அனைத்தும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சம் புகுவதற்காக எப்போதும் திறந்தே வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இயங்கி வரும் காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 700 பொதுமக்களுக்கு இன்று காலையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. அமைப்பின் தலைவர் ஆடிட்டர் ரிஃபாய், நிர்வாகி குளம் இப்றாஹீம் ஆகியோர் தம் குடும்பத்தினருடன் இணைந்து சென்று நிவாரண உதவிகளை அமைப்பின் சார்பில் வழங்கி வந்தனர்.
நாளையும் (டிசம்பர் 04) 1000 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அவ்வமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KCGC சார்பாக...
தகவல் & படங்கள்:
S.K.ஷமீமுல் இஸ்லாம்
சொளுக்கு M.A.C.முஹம்மத் நூஹ்
KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|