நவம்பர் மாத நகர்மன்றக் கூட்டத்தில், நகர்மன்றத் தலைவரை உறுப்பினர் ஒருவர் அவதூறாகப் பேசியதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியில், கூட்டம் பாதி நடைபெற்ற நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
நகர்மன்றக் கூட்டம்:
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் நவம்பர் மாதத்திற்கான சாதாரண கூட்டம், 30.11.2015 திங்கட்கிழமையன்று 11.30 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகராட்சி அலுவலக வெளியரங்கில் அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலின் கீழ் நடைபெற்றது.
பங்கேற்றோர்:
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் மற்றும் 18 வார்டு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டப் பொருள்:
இக்கூட்டத்தில், பின்வருமாறு - 106 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்படவிருந்தது:-
DCW ஆலை குறித்த மேசைப்பொருள்:
கூட்டப் பொருட்களை வாசிக்கத் துவங்குகையில், எழுந்து பேசிய 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கிவரும் டி.சி.டபுள்யு. ஆலையின் கட்டிடங்களை அளவீடு செய்து, அவற்றுக்கான வரிகளை ஆலை நிர்வாகம் முறையாகச் செலுத்துகிறதா
என்பது குறித்து 20 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க - நகராட்சி ஆணையர், பொறியாளர் பிரிவு, வருவாய் ஆய்வாளரைக் கேட்டுக்கொள்வதாகவும்,
காயல்பட்டினம் நகராட்சியின் முந்தைய ஆணையரால் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள தொழிற்சாலையின் பிரிவு ஒன்றுக்கான அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என - நகர்மன்றத் தலைவரின் கையெழுத்து பெற்று - மேசைப் பொருளை முன்வைத்தார்.
இது குறித்து பேசிய நகர்மன்றத் தலைவர், முன்னாள் ஆணையர் ஒப்புதல் வழங்கிய SIOPP பிரிவுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்நிறுவனம் திட்டமிட்டுள்ள PVC விரிவாக்கம் மற்றும் புதிதாக CPVC அமைதல் திட்டங்களுக்கும் அனுமதி வழங்க கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு, அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இசைவு தெரிவித்ததையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாமியின் கருத்து:
அடுத்து பேசிய 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி, நீதிமன்ற வழக்கு காரணமாக நிலுவையிலுள்ள 43 சாலைகளுக்கு முடிவு கிடைக்காத வரை, புதிதாக சாலைகள் அமைக்க - நடப்பு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கூட்டப் பொருள்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினார்.
தீர்மானங்கள்:
பின்னர், கூட்டப் பொருட்கள் வாசிக்கப்பட்டது. துவக்கமாக, நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஒத்திவைக்கப்பட்ட கூட்டத்தின் பொருட்கள் வாசிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டப் பொருட்களும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சுருக்கமும் வருமாறு:-
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விபரங்கள் நகர்மன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால், நகர்மன்றத் தலைவர் இத்தீர்மானத்திற்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்தார். இருப்பினும் - பெருவாரியான உறுப்பினர்கள் நகர்மன்றத் தலைவரின் குறிப்பினை நிராகரித்து, தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க ஆதரவு தெரிவித்தனர்.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, மார்ச் மாத கூட்டப் பொருட்களுள் முதல் 8 பொருட்கள் வாசிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டப் பொருட்களும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சுருக்கமும் வருமாறு:-
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
75 பணியாளர்களை நியமிக்கலாம் என்று ஆணையர் ம.காந்திராஜ் கூறினார்.
துப்பரவு பணியாளர்கள் சம்பளம் என்பது ஒரு முறை செய்யப்படும் செலவு இல்லை என்றும், ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய் சம்பளம் என்று எடுத்துக் கொண்டால், 100 பேருக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும் என்றும், இது தொடர்ச்சியான செலவு என்றும் கூறிய நகர்மன்றத் தலைவர், இச்செலவு ஒரு முறையோடு நிற்க போவதில்லை என்பதால் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு 50 பேருக்கு மட்டும் இப்போது அனுமதி கொடுக்கலாம் என்று கூறினார். இதைப் பெருவாரியான உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகக் குறிப்பின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரத்து செய்து மறு ஒப்பந்தப்புள்ளி கோர தீர்மானிக்கப்பட்டது.
5 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
1 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இந்த பொருள் குறித்து விவாதம் நடந்தபோது, காயல்பட்டினம் நகராட்சியில் தெருவிளக்குகள் இல்லாத மின் கம்பங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்கள் குறித்து கணக்கெடுப்பு செய்ய உத்தரவிடப்பட்டும், இதுவரை செய்யப்படவில்லை என்றும், இதுகுறித்து நகராட்சி பொறியாளர் இக்கூட்டத்திலேயே விளக்கமளிக்க வேண்டும் என்றும் நகர்மன்றத் தலைவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, கூட்ட அரங்கிற்கு வந்த நகராட்சி பொறியாளர் சிவக்குமார், கணக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும், இரண்டு வாரங்களில் பணி முடிக்கப்படும் என்றும் கூறினார்.
குறுக்கிட்ட நகர்மன்றத் தலைவர், புதிய நகர்மன்றம் பொறுப்பேற்ற துவக்கத்திலேயே பணிக்கப்பட்டும், இன்றளவும் கணக்கெடுக்காமல், பொறியாளர் அலட்சியமாகப் பேசிக்கொண்டிருப்பதாகவும், தன்னுடன் இணைந்து உறுப்பினர்களும் கேட்காத வரையில், அதிகாரிகள் அலட்சியமாகவே செயல்படுவர் என்றும், அவர்களின் அலட்சியத்தால்தான், தலைவர் - உறுப்பினர்களிடையே பெரும்பாலும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகவும் கூறினார்.
தலைவரைத் தரக்குறைவாகப் பேசிய 12ஆவது வார்டு உறுப்பினர்:
காயல்பட்டினம் நகர்மன்ற கூட்டங்களில், நகர்மன்றத் தலைவர் பேசும்போதெல்லாம், இடையிடையே - அதைக் கிண்டல் செய்வதை பல உறுப்பினர்கள் வழமையாகக் கொண்டுள்ளனர்.
நடப்பு கூட்டத்தில், தெரு விளக்கு கம்பங்கள் குறித்து அதிகாரிகளை நகர்மன்றத் தலைவர் கண்டித்துப் பேசுகையில், இடைமறித்து பேசிய 12ஆவது வார்டு உறுப்பினர் ரங்கநாதன் என்ற சுகு, நகர்மன்றத் தலைவரை தரக்குறைவாகப் விமர்சித்தார். அதைத் தொடர்ந்து – 12ஆவது வார்டு உறுப்பினரை நகர்மன்றத் தலைவர் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்க, கூட்டத்தில் அமளி ஏற்பட்டது.
14ஆவது வார்டு உறுப்பினர் வாக்குவாதம்:
12வது வார்டு உறுப்பினருக்கு ஆதரவாக பெருவாரியான உறுப்பினர்கள் பேசினர். குறிப்பாக - 14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா நகர்மன்றத் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், தன்னை தகாத சொற்களில் நகர்மன்றத் தலைவர் திட்டியதாக - 14ஆவது வார்டு உறுப்பினர் - குற்றம் சாட்டினார். உறுப்பினர் கூறுவது உண்மை என பெருவாரியான உறுப்பினர்கள், அவருக்கு ஆதரவாக, நகர்மன்றத் தலைவரிடம் பேசினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நகர்மன்றத் தலைவர், தான் அவ்வாறு பேசவில்லை என்றும், தான் சத்தியம் செய்ய தயார் என்றும், அவ்வாறு தான் பேசியதை நிரூபித்தால் - தான் மன்னிப்பு கேட்க தயார் என்றும் கூறினார்.
இருந்தும் அமளி தொடரவே, நகர்மன்றத் தலைவர் கூட்டத்தை 2 மணி நேரத்திற்கு ஒத்திவைத்தார். ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர், முத்து சுப்பிரமணியம் நகர்மன்ற வளாகத்திற்கு வந்தார். பின்பும் கூட்டம் தொடரவில்லை.
கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற முயற்சி:
இந்த சர்ச்சைகள் துவங்குவதற்கு முன்பாகவே - 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, 03ஆவது வார்டு உறுப்பினர் பீ.எம்.எஸ்.சாரா உம்மாள், 04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டீ.முத்து ஹாஜரா, 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டீ.பீவி ஃபாத்திமா, 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா ஆகிய பெண் உறுப்பினர்கள் கூட்ட அரங்கை விட்டும் கிளம்பிச் சென்றுவிட்டனர்.
அந்நேரத்தில், 14ஆவது வார்டு உறுப்பினர் ஏ.பாக்கியஷீலாவை நகர்மன்றத் தலைவர் தகாத சொற்களால் திட்டியதாகவும், அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி, 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி கண்டன தீர்மானத்தை ஆயத்தம் செய்து, உறுப்பினர்களிடம் கைச்சான்று பெற்றுக்கொண்டிருந்தார். சில உறுப்பினர்களைத் தவிர பெரும்பான்மை உறுப்பினர்கள் அதில் கைச்சான்றிட்டனர்.
இந்நிலையில், விவகாரம் முற்றி காவல்துறையினரும் வந்த நிலையில், 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, 03ஆவது வார்டு உறுப்பினர் பீ.எம்.எஸ்.சாரா உம்மாள் ஆகியோர் கூட்ட அரங்கிற்குள் வந்து இருக்கையில் அமர்ந்தனர்.
அவர்களிடமும் கைச்சான்று பெற உறுப்பினர் சாமி முனைந்தபோது, “இங்கு நடைபெற்ற விவகாரத்தின்போது நீங்கள் இருவரும் இங்கு இருந்தீர்களா? இங்கு நடந்தது என்ன என்பதாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று அவ்விருவரிடமும் உறுப்பினர் கே.ஜமால் கேட்க, அவர்கள் “எதுவும் தெரியாது” என்று கூறினர். “அப்படியானால், இந்தக் கண்டன தீர்மானத்தில் நீங்கள் இருவரும் கைச்சான்றிடுவது எப்படி சரியாகும்?” என்று கேட்க, அவர்கள் மவுனம் காத்தனர்.
இதைக் கண்டித்த பெரும்பான்மை உறுப்பினர்கள், உறுப்பினர் கே.ஜமாலின் இச்செயலைக் கண்டித்தும், எச்சரித்தும் பேசினர்.
14வது வார்டு உறுப்பினரின் குற்றச்சாட்டு பொய்யென நிரூபணம்:
பிறகு நகர்மன்றத் தலைவரின் அறையில், நகர்மன்ற கூட்டத்தின் ஒலிப்பதிவை - 05ஆவது வார்டு உறுப்பினர் ம.ஜஹாங்கீர், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால் உட்பட சிலர் கேட்டனர். அதில் 14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கியஷீலா குற்றஞ்சாட்டியவாறு - நகர்மன்றத் தலைவர் பேசவில்லை என்பது நிரூபணமானது. இத்தகவலை தான் ஏனைய உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பதாக, 05ஆவது வார்டு உறுப்பினர் ம.ஜஹாங்கிர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சுமார் 25 பொதுமக்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
அசைபடப் பதிவு:
கூட்டத்தின் முழு அசைபடப்பதிவைக் காண, கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முந்தைய (12.10.2015 அன்று) மாதாந்திர கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|