| |
செய்தி எண் (ID #) 16923 | | | புதன், டிசம்பர் 2, 2015 | இரண்டு நாட்கள் சாரல் மழை! சென்னையில் கனமழை காரணமாக செந்தூர், நெல்லை விரைவு வண்டிகள் ரத்து!! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 2120 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டினத்தில் கடந்த நவம்பர் 30ஆம் நாள், டிசம்பர் 01ஆம் நாள் ஆகிய இரு நாட்களிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்துகொண்டேயிருந்தது.
இன்று (டிசம்பர் 02 புதன்கிழமை) நகரில் மழையில்லை. வெயில் ஒளிர்கிறது. வெப்ப வானிலை நிலவுகிறது.
சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, விழுப்புரம் - தாம்பரம் தொடர்வண்டி வழிடத்தடம் முழுக்க மழைநீர் வழிந்தோடிக் கொண்டிருப்பதால்,
Train No.12635 Chennai Egmore – Madurai Vaigai Express
Train No.16723 Chennai Egmore – Trivandrum Ananthapuri Express
Train No.12693 Chennai Egmore – Tuticorin Pearl City Express
Train No.12661 Chennai Egmore – Sengottai Pothigai Express
Train No.12631 Chennai Egmore – Tirunelveli Nellai Express
Train No.16181 Chennai Egmore – Manamadurai Silambu Express
Train No.12605 Chennai Egmore – Karaikkudi Pallavan Express
Train No.16105 Chennai Egmore – Tiruchendur Chendur Express
Train No.16713 Chennai Egmore – Rameswaram Sethu Express
ஆகிய - சென்னையிலிருந்து புறப்படும் தொடர்வண்டிச் சேவைகளும்,
Train No.12638 Madurai – Chennai Egmore Pandian Express
Train No.12662 Sengottai – Chennai Egmore Pothigai Express
Train No.12632 Tirunelveli – Chennai Egmore Nellai Express
Train No.12694 Tuticorin – Chennai Egmore Pearl City Express
Train No.16724 Trivandrum – Chennai Egmore Ananthapuri Express
Train No.16180 Manamadurai – Chennai Egmore Silambu Express
ஆகிய - சென்னைக்குச் செல்லும் தொடர்வண்டிச் சேவைகளும், இன்று (02.12.2015. பதன்கிழமை) நிறுத்தப்பட்டுள்ளதாக, தென்னக ரயில்வேயின் மதுரை மண்டல மக்கள் தொடர்பு அலுவலர் டி.ஓம் ப்ரகாஷ் நாராயன் அறிவித்துள்ளார்.
நிறுத்தம் செய்யப்பட்டுள்ள இத்தொடர்வண்டிச் சேவைகளில், முன்பதிவு மூலம் இருப்பிடம் பெற்றவர்கள், 72 மணி நேரத்திற்குள், தமது முழு பயணக்கட்டத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|