சஊதி அரபிய்யா ரியாத் நகரில் நடைபெற்ற - காயல் அஸ்ஹர் ஜமாஅத் கலந்தாலோசனைக் கூட்டம் குறித்து, அவ்வமைப்பிடமிருந்து பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அரும்பெரும் கிருபையினால் சஊதிஅரபியா - ரியாத் நகரிலுள்ள காயல் அஸ்ஹர் ஜமாஅத்தின் (ஜாமிஉல்அஸ்ஹர், அன்னை ஆயீஷா சித்தீகா மகளிர் கல்லூரி மற்றும் தஃவாசென்டர் உள்ளடக்கிய) கலந்தாலோசனைக்கூட்டம், 20.11.2015 வெள்ளிக்கிழமையன்று மஃரிப்தொழுகைக்குப்பின், சகோ. ஹைதர்அலீ அவர்கள் இல்லத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!
இக்கூட்டத்திற்கு சகோ.குலாம்அவர்கள் தலைமையேற்றார்கள். ஆரம்பமாக இறைமறையின் இனிய வசனத்தை இளவல் ஹாபிழ் தாவூத் ஓதி துவக்க அதனைத்தொடர்ந்து இக்கூட்டத்தின் நோக்கத்தினை சகோ. ஹைதர் அலி அவர்கள் விளக்கினார்கள்.
நீண்ட இடைவெளிக்குப்பின் கூடுவதகாவும் இருந்தபோதிலும் நிறைய புதிய மக்களை காண்பது மகிழ்ச்சிஅளிப்பதாகும். இனி வரும் காலங்களில் தொய்வின்றி நடைபெற அனைவரும்ஒத்துழைப்பு தரும்படியும், சந்தா பாக்கிஉள்ளவர்கள்உடனடியாக செலுத்தும்படிகேட்டுக்கொண்டார்கள்.
அடுத்து அன்னன ஆயீஷாசித்தீகாமகளிர் கல்லூரியின் தற்போதைய நிலவரம் மற்றும் தேவைகளை தம்மாமில் இருந்து சகோ இஸ்மாயில்அவர்கள் பேசி வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி வைத்தார்கள் , அதில் அல்ஹம்துலில்லாஹ் நம் கல்லூரிஆரம்பிக்கப்பட்டத்திலிருந்து தமிழகத்தின் பலபகுதியில் இருந்தும் இதுவரை 600 மாணவிகள் பட்டம் பெற்று சென்றிப்பதாககும், அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பகுதிகளில்சிறப்பாக மார்க்க பணியாற்றி வருவதை நம்கல்லூரியில் நடந்த ஸித்தீக்காகளின் சங்கமம் நிகழ்ச்சயின் அறியப்பட்டதாக தெரிவித்தார்கள்.மேலும் நம் கல்லூரியின் கட்டிடம் பழுதடைந்து உள்ளதால் அதை புதுப்பிக்க நாம் அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளை வழமை போன்று வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்..
அடுத்துதஃவா சென்டரின் செயல்பாடுகளை அதன் மேலாளர் சகோ ஜக்கரியா அவர்களை தொடர்புகொண்டகேட்டபொழுது, தாம் தற்போது ஒருகிராமத்தில் தஃவாபனியாற்றி கொண்டிருப்பதால் அங்கிருந்தே வாட்ஸ்அப் மூலம்செயல்பாடுகளை விளக்கினார்கள். இதனைத் தொடர்ந்து நம்பள்ளியின்கட்டுமானப்பணியை பற்றிவிசாரிப்பதற்காக சகோ. இப்னுசவூத் அவர்களை தொலைபேசிமூலம் தொடர்புகொணடு விசாரிக்கையில் , பணிகள்யாவும் முடியும் தருவாயில் இருப்பதாவும்,மழைகாரணத்தினால் சற்றுதாமதம் ஆவதால் மழைநின்றபின் இரண்டு மாதத்திற்குள் இன்ஷாஅல்லாஹ்பணிகள்யாவும்முடிவடைந்து புதுபொழிவுடன்விளங்கும் என்று தெரிவித்தார்கள்.
அதனை தொடர்ந்து கருத்துக்கள் பரிமாறப்பட்டு கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன,
1) அன்னனஆயீஷாசித்தீகாமகளிர் கல்லூரிக்கு வழங்கப்பட்டுவரும்தொகையைஉயர்த்துவது
2) நிர்வாகத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, இதுவரை பொருளாளராக சிறப்பாக செயல்பட்டு வந்த சகோ.ஷாதுலி அவர்களை துணைதலைவராக நியமித்து, பொருளாளராக சகோ, வெள்ளிசித்தீக் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
3) நமதுஜமாத்தின்அடுத்தகூட்டம் இன்ஷாஅல்லாஹ் டிசம்பர் கடைசிவாரத்தில் கூட்டமுடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு சகோ.ஆதம்அபுல்ஹசன் மற்றும் வெள்ளிசித்தீக்அவர்கள் உடைய அனுசரனையில் காயல் கரிகஞ்சியும், வடை, சமோசா, ரோல் பரிமாறப்பட்டது. கஃப்பாராவுடன் கூட்டம் நிறைவுற்றது. பின்னர், ஹாஃபிழ் தாவூத் ஷாதுலீ வழிநடத்தலில், இஷா தொழுகை கூட்டாக நிறைவேற்றப்பட்டது. குழுப்படம் பதிவு செய்யப்பட்ட பின், அனைவரும் வசிப்பிடம் திரும்பிச் சென்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ரியாதிலிருந்து...
சோனா அப்துல் காதிர்
ரியாத் காயல் அஸ்ஹர் ஜமாஅத் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|