முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு, SDPI கட்சியின் சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தமிழகத்தில் வெள்ள நிவாரண உதவிகளுக்காக எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதியை தமிழக அரசிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வழங்கினார்.
சமீபத்தில் தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தமிழகம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. லட்சத்துக்கும் மேலான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாயினர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளும், செயல்வீரர்களும் தொடர்ந்து மீட்பு பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், எஸ்.டி.பி.ஐ சார்பாக வெள்ள நிவாரண நிதி வசூலிக்கப்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முதல்வர் பொது நிவாரண நிதிக்காக எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ரூ.5 லட்சம் நிதியை, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, தமிழக அரசின் நிதித்துறை இணைச் செயலாளரிடம் நேரில் வழங்கினார்.
அப்போது, கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, மாநில செயலாளர் உஸ்மான் கான், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SDPI / PFI தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
|