தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. கடலூர், சென்னை நகரங்களில் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுமுகமாக பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில், முஸ்லிம் சமுதாய அமைப்புகள் பல்வேறு அமைப்புகள் முனைப்புடன் களப்பணியாற்றி வருகின்றன. சென்னையில், காயல்பட்டினம் மக்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் சார்பில், உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனியார்வலர்களை ஒருங்கிணைத்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கென, அவ்வமைப்பின் தலைவர் ஆடிட்டர் ரிஃபாய், நிர்வாகி குளம் முஹம்மத் இப்றாஹீம், எஸ்.இப்னு ஸஊத் உள்ளிட்டோரடங்கிய சிறப்புக் குழு KCGC சார்பில் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஒருங்கிணைப்பில், நிவாரணப் பணிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிவாரணத் திட்டப் பணிகளை வடிவமைப்பதற்காக, இன்று காலையில், சென்னை அசோகா ஹோட்டலில் இக்குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
KCGC அமைப்பின் சார்பில், சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் பொதுமக்களுக்கு உணவுப் பொதிகளும், குடிநீர் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளது. 500 பேருக்கு தரமான போர்வைகள் வழங்கப்படவுள்ளன.
இவை தவிர அவர்களின் இதர தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு KCGC அமைப்பின் மூலம் உதவ விரும்புவோர்,
1. ‘நெட்காம்’ புகாரீ (+91 90946 54940)
2. எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் (+91 85909 51015)
3, எம்.எம்.செய்யித் இப்ராஹீம் (+91 99416 29941)
4. குளம் முஹம்மத் தம்பி (+91 98401 84838)
5. சொளுக்கு முஹம்மத் நூஹ் (+91 93828 08007)
ஆகியோருள் ஒருவரைத் தொடர்புகொண்டு விபரம் பெற்றுக்கொள்ளலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |