தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. கடலூர், சென்னை நகரங்களில் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுமுகமாக பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில், முஸ்லிம் சமுதாய அமைப்புகள் பல்வேறு அமைப்புகள் முனைப்புடன் களப்பணியாற்றி வருகின்றன. சென்னையில், காயல்பட்டினம் மக்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையத்தின் சார்பில் வெள்ள நிவாரணக் குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவின் மூலம் - உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனியார்வலர்களை ஒருங்கிணைத்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. KCGC வெள்ள நிவாரணக் குழுவின் முதலாவது கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை ஹோட்டல் அசோகாவில் நேற்று (05.12.2015. சனிக்கிழமை) காலையில் நடைபெற்றது. இக்கூட்ட நிகழ்வுகள் குறித்து, KCGC அமைப்பின் வெள்ள நிவாரணக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்... புகழ் அனைத்தும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே!
சென்னையில் பெய்துவரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உடைகள் காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) மூலமாக கடந்த 4 நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது, அல்லாஹ் அக்பர்.
பெருமளவில் நிதி தேவைப்படும் இந்த இக்கட்டான சூழலைக் கருத்திற்கொண்டு, இந்தியாவிலுள்ள அனைத்து காயல் நல மன்றங்களையும், உலகளாவிய காயல் நல மன்றங்களையும் ஒருங்கிணைத்து, செயல்திட்டம் வகுத்து - பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டதன் அடிப்படையில், KCGCயின் அவசர ஆலோசனைக் கூட்டம், சென்னை எழும்பூரிலுள்ள அசோகா ஹோட்டலில், 05.12.2015. சனிக்கிழமையன்று 11.00 மணி முதல் 13.00 மணி வரை நடைபெற்றது.
எஸ்.இப்னு ஸஊத் தலைமை தாங்கினார். ஆடிட்டர் ரிஃபாய், குளம் இப்றாஹீம், பீ.ஏ.கே.சுலைமான், எம்.எம்.அஹ்மத், ‘நெட்காம்’ புகாரீ, வழக்குரைஞர் ஹஸன் ஃபைஸல், சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ், குளம் முஹம்மத் தம்பி ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பின்வருமாறு முடிவுகள் எடுக்கப்பட்டன:-
1. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் உணவு, உடைகள் வழங்குவது.
2. உணவு, உடைகள் வாங்குவதற்குத் தேவையான பணத்தை - அனைத்து காயல் நல மன்றங்களை ஒருங்கிணைத்தும், தனியார்வலர்கள் தாமாக முன்வந்து தரும் நன்கொடைகளைப் பெற்றும் செய்துகொள்வது; இதற்கென தனிக்கணக்கை அமைத்துப் பராமரிப்பது.
3. வங்கிக் கணக்கு மூலம் நன்கொடையளிக்க விரும்புவோர்,
Serve All Foundation
AXIS Bank
A/C no.913020023402404
Mylapore Branch
IFS Code: UTIB0000006.
என்ற வங்கிக் கணக்கில் செலுத்திக்கொள்ளலாம்.
4. இதன் மூலம் வசூலாகும் தொகையைக் கொண்டு கீழ்காணும் பொருட்களை முதல் தவனையாக வாங்க வேண்டும் எனவும் அதனைத் தொடர்ந்து தேவைக்கேற்ப மற்ற பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதுவரை ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் வருமாறு:-
1) பெண்கள் நைட்டி-1000
2) பெட் சீட் (போர்வை)-1000
3) ஆண்கள் லுங்கி-1000
4) ஆண்கள் டீ சர்ட்-1000
5) ஆண்கள் சர்ட்-100
6) பிரட் பாக்கட்-1000
7) பிஸ்கட் பாக்கெட்-1000
8) வாட்டர் பாக்கெட்-50 மூடை
5. இதுவரை பெறப்பட்ட நன்கொடைகள் விபரம்:
1. காயல் நல மன்றம் அபூதபீ -50,000
2. காயல் நல மன்றம் ஜித்தா -40,000
3. காயல் நல மன்றம் கோழிக்கோடு -37,000
4. சகோ.சாளை முஹம்மது முஹைதீன் -15,000
5. சகோ. அ.க.முஸ்தபா -5,000
6. சகோ.அட்வகேட் ஹஸன் ஃபைசல்-5,000
7. சகோ.நெட்காம் புஹாரி-1,000
8. சகோ.சொளுக்கு முஹம்மது நூஹ்-5,000
9. பூட்டு மார்க் கம்பெனியினர் சார்பாக -300 லுங்கிகள்
10. சகோ. எம்.எம்.அஹமது சார்பாக 50 தண்ணீர் பாக்கெட் மூடைகள்.
11. சகோ. எல்.கே.கே.லெப்பைத்தம்பி -50,000
12. சகோ.இப்னு சவூத் மூலமாக -1,00,000
13. சகோ.குளம் இப்றாகிம் அவர்களின் அயிசரா ஜுவல்ஸ் சார்பாக -50,000
14. சகோ. ஹஸன் மைக்ரோ காயல் -10,000
15. ரியாத் காயல்நல மன்றம் -35000
16. மர்ஹூம் ஷாமு ஷிஹாபுத்தீன் மற்றும் குடும்பத்தார் -50000
அனுசரணையளித்தோர் அனைவருக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக துவா கஃப்பாராவுடன் கூட்டம் நிறைவுற்றது. வல்ல இரட்சகன் நம் அனைவர் மீதும் கருணைபுரிந்து நம் செயல்கள் அனைத்தையும் கபூல் செய்வானாக, ஆமீன். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!!!.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |