தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. கடலூர், சென்னை நகரங்களில் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுமுகமாக பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, நகர் முழுக்க நிவாரண நிதி திரட்டப்பட்டது.
சேகரிக்கப்பட்ட மொத்த தொகையான 3 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை, அதன் மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரிடம், காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.
இத்திட்டத்திற்காக உதவிய அனைவருக்கும் இந்நிகழ்வின்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|