உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்த - சுமார் 400 ஆண்டு கால பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் தேதியன்று இந்துத்துவ அமைப்பினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் டிசம்பர் 06ஆம் நாளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வகைப் போராட்டங்களும், கருத்தரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
06.12.2015. ஞாயிற்றுக்கிழமையன்று 17.00 மணிக்கு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஏ.ஃபாஸில் ஷமீல் தலைமையேற்றார். SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் எம்.ஷேக் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஏ.உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.அஹ்மத் நவவீ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஸ்ஹப், ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.கே.குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
காயல்பட்டினம் கிளை தலைவர் எச்.எம்.அஷ்ரஃப் நன்றி கூறினார். கபீர், காதிர் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட கிளைகளின் நிர்வாகிகள், அங்கத்தினர், காயல்பட்டினம் நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
SDPI / PFI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 15:23 / 08.12.2015]
|