சிறுதொழில் தொடங்க கடனுதவி செய்ய கொள்கையளவில் காயல்பட்டினம் பைத்துல்மால் முடிவு செய்துள்ளது. இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
நாள்: 04.12.2015 வெள்ளிக்கிழமை பின்னேரம் சனி இரவு 8:00 இடம்: காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை அலுவலகம் கிராஅத்: . M.L. சேக்னா லெப்பை தலைமை: வாவு M.M. சம்சூத்தீன் அவர்கள்
1. நமதூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் பயன்படுத்த கழிவறை கட்டிக் கொடுப்பதற்காக கொள்கை அளவில் முடிவெடுக்கப்பட்டது.
2. அரசு மருத்துவமனையில் நோயாளிகளை மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யும் போது அத்தகைய நோயாளிகளுக்கு ரூ.1000/- வரை உதவித்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
3. சிறுதொழில் தொடங்க சுயஉதவிக்குழு மூலம் தொழில் செய்ய கடன் வழங்கலாம் என கொள்கைகள் மூலம் தீர்மானிக்கப்பட்டது.
5ஆம் தேதி, துஃபைல் காம்ப்ளக்சில் நடந்த “காயல்பட்டணம் முஸ்லிம் வெள்ள நிவாரண கூட்டமைப்பு” துவக்கக் கூட்டத்தில் முதன்முதலாக காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை ரூ.50,000 வெள்ள நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்திருக்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross