காயல்பட்டினத்தில் இம்மாதம் 06ஆம் நாளன்று அதிகாலையில் பெய்த இதமழைக்குப் பிறகு ஓரளவுக்கு வெயில் ஒளிர்ந்தது. மீண்டும் டிசம்பர் 07 அன்று (நேற்று) சாரல் மழை தொடர்ச்சியாகப் பெய்தவண்ணம் இருந்தது.
இன்று (டிசம்பர் 07) 17.30 மணியளவில் நகரில் இதமழை பெய்தது. இரவானதும் அது சாரல் மழையானது. 23.30 மணி நிலவரப்படி, மிகச் சிறிய துளிகளாக மழை தூறிக்கொண்டே உள்ளது.
“மாலையில் கடற்கரைக்குச் செல்லாவிட்டால் சுவாசம் நின்றுவிடும்” என்று சொல்வோர் போல, இன்று மாலையில் கடற்கரையில் விரல் விட்டு எண்ணுமளவிலேயே பொதுமக்கள் இருந்தனர். திடீரென மழை பொழிந்ததால், அவர்கள் அங்குள்ள மண்டபத்தில் தஞ்சமடைந்தனர்.
எதைப்பற்றியும் கவலைப்படாத மாணவர்கள் சிலர், மழை பொழிவிற்கிடையே கால்பந்து விளையாடிக் களித்துக்கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடமிருந்து இன்று (டிசம்பர் 07) பெறப்பட்ட மழை பொழிவுப் பட்டியல் படி, காயல்பட்டினத்தில் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|