தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் உள்ள தாழ்வான கிராமங்களில் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
வடகிழக்கு பருவ மழை தீவிரமானதன் காரணமாக பாபநாசம் அணைக்கட்டிலிருந்து வினாடிக்கு 14,500 கனஅடி வீதமும் சேர்வலாறு அணைக்கட்டிலிருந்து வினாடிக்கு 6,000 கனஅடி வீதமும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாகவும் திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு மொத்தம் வினாடிக்கு 30,000 கனஅடி நீர்வரத்து இன்று மாலை தாமிரபரணி ஆற்றில் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் உள்ள தாழ்வான கிராமங்களில் வசித்து வரும் மக்கள் தங்கள் அருகாமையில் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களுக்கு சென்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவிததுள்ளார். |