கடலூருக்கு ஆடைகளும் அதிகளவில் தேவைப்படுவதால் நல்ல நிலையிலுள்ள ஆடைகளை மட்டும் அயர்ன் செய்து, மடித்துத் தரலாம் என காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரணக் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதன் துணைத்தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ வெளியிட்டுள்ள அறிக்கை:-
அன்பான காயலர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து சமய மக்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக, காயல்பட்டினத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் 4 வாகனங்களில் இரண்டு பிரிவுகளாக இன்று காலை முதல் களமிறங்கிப் பணியாற்றி வருகிறது - நகரின் அனைத்து தொண்டு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்த கூட்டமைப்பான “காயல்பட்டினம் முஸ்லிம் வெள்ள நிவாரண கூட்டமைப்பு”.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பயன்படுத்தப்பட்ட ஆடைகள் வேண்டாம் என்று கூறியிருந்தோம். ஆனால், அங்கு ஆடைகள் அதிகளவில் தேவைப்படுவதாக இன்று காலையில் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
எனவே, இன்றைய மாலை நகர்வலத்தில், பயன்படுத்திய “நல்ல” நிலையிலுள்ள ஆடைகளை, அயர்ன் செய்து, மடித்த நிலையில் தந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.
இதுவரை, நகர்வலம் வந்து சென்ற பகுதிகளில் யாரேனும் “இந்த தகுதி”யில் ஆடைகளை வைத்திருந்தால், பெரிய நெசவுத் தெருவிலுள்ள ஜனாப் எஸ்.இப்னு ஸஊத் அவர்களின் இல்லத்தில் (ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளி அருகில்) சேர்க்க அன்புடன் வேண்டுகிறோம்.
மிக முக்கியத் தேவை நிதியாதாரம். எனவே 10 ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை. அனைவரும் பங்களிக்க வேண்டும். பாத்திரங்கள் அதிகளவில் தேவைப்படுவதால், அவற்றை அதிகளவில் தந்துதவ வேண்டுகிறோம்.
(இத்தகவலை, உங்களுக்கு அறிமுகமான அனைவருக்கும் மிக வேகமாகப் பகிரவும். இன்னும் சில நிமிடங்களே உள்ளன.)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
காயல்பட்டினம் முஸ்லிம் மழை வெள்ள நிவாரணக் கூட்டமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|