துபையில், இரண்டாயிரம் மாணவ-மாணவியர் பங்கேற்க நடைபெற்ற Abacus போட்டியில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த சிறுவன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 11 வயது நிரம்பிய மாணவர் முஹம்மத் அர்ஹம். மீரா ஸாஹிப் என்ற கே.என்.ஹாஜி - கதீஜா ஏ.ஸஃபானா தம்பதியின் மகனும், ஈரான் காஜா - எம்.இ.அஜீஸ் ஆகியோரின் பேரனுமான இவர், ஐக்கிய அரபு அமீரகம் துபையிலுள்ள க்ரஸெண்ட் ஆங்கிலப் பள்ளியில் 05ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
05.12.2015. சனிக்கிழமையன்று, துபை ஷேக் ராஷித் அரங்கத்தில், Brain O Brain நிறுவனத்தாரால் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட - அமீரக தேசிய அளவிலான 7ஆவது Abacus போட்டியில், சுமார் இரண்டாயிரம் மாணவ-மாணவியருடன் இவரும் கலந்துகொண்டார். 6ஆவது நிலை பங்கேற்பாளர்களுக்கான போட்டியில் (6th level competition) இம்மாணவர் சாம்பியனாகத் தேர்வு செய்யப்பட்டார். சாதனை மாணவரை, அவர் பயின்ற பள்ளி நிர்வாகத்தினரும், காயலர்கள் பலரும் பாராட்டினர்.
உலகளவில் பல கிளைகளைக் கொண்ட Brain O Brain நிறுவனம், பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் நுண்ணறிவுடனும், ஊக்கத்துடனும் பயில்வதற்காக - சிறப்பு தொழில்நுட்பங்களுடன் கூடிய பயிற்சியை வழங்கி வருகிறது.
அங்கு பயிலும் மாணவன் முஹம்மத் அர்ஹம், தனது ஒரு கையால் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டே, மறு கையால் கணக்குகளைச் செய்யும் திறன் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துபையிலிருந்து...
தகவல்:
சாளை ஷேக் ஸலீம்
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 11:00 / 11.12.2015] |