காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
டிசம்பர் 12, 2007 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 1442]
நகர்மன்ற அதிருப்தி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!
காயல்பட்டணம் நகர்மன்றத்தில் சமீபகாலமாக நிலவிவரும் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா பிரச்சினையில் ஊழலுக்கு எதிரான பணிகள்
தொடரவேண்டும் என்று வலியுறுத்தி காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நேற்று முன்தினம் பொதுமக்கள் விழிப்புணர்வுப் பேரணி மற்றும்
ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இது ஒருபுறமிருக்க நகர்மன்றத் தலைவர் தனது பொறுப்பை சரிவரச் செய்யவில்லை என குற்றஞ்சாட்டியும், நிர்வாக அதிகாரியைக் கண்டித்தும்
அதிருப்தி உறுப்பினர்கள் இன்று காலை 10 மணியளவில் காயல்பட்டணம் புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜனாப் எம்.எல்.செய்யித் இப்றாஹீம் (எஸ்.கே.) தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர்.
இறுதியாக அலிஅக்பர் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
ஆர்ப்பாட்டக் காட்சிகள் பின்வருமாறு:-
ஆர்ப்பாட்ட முழக்கங்கள் பின்வருமாறு:-
நிர்வாக அதிகாரியே... நிர்வாக அதிகாரியே...
தலைவர் ராஜினாமாவை ஏற்றுக் கொள்.
சுமத்தாதே... சுமத்தாதே...
கவுன்சிலர் மீது வீண்பழி சுமத்தாதே.
தலைவரே... தலைவரே...
ராஜினாமா செய்த பின்
பதவிக்கு துடிப்பதேன்.
சொல்லாதே... சொல்லாதே...
தலைவரே பொய் சொல்லாதே.
ஏமாற்றாதே... ஏமாற்றாதே...
நகர மக்களை ஏமாற்றாதே.
சீ... சீ... வெட்க கேடு
தூ... தூ... மானக் கேடு.
படாதே.... படாதே....
பதவிக்கு ஆசைபடாதே.
தோழரே.... தோழரே....
ஊரை இரண்டா ஆக்காதே.
தாமதம் ஏன்.... தாமதம் ஏன்...
தலைவர் ராஜினாமாவை ஏற்க தாமதம் ஏன்.
வளர்ப்போம்... வளர்ப்போம்...
மத நல்லிணக்கம் வளர்போம்.
|