கடந்த சில நாட்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதை தொடர்ந்து, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஆத்தூர் - முக்காணிக்கு இடையே இரு பாலங்கள் உள்ளன. அவற்றில் - ஒரு பாலம் (கிழக்கு) பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.
தற்போது - தாமரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து, பழைய பாலத்தை தொடும் அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு - புதிதாக திறக்கப்பட்ட பாலம் வழியாக வாகனங்கள் செல்கின்றன.
1. சுத்தம்செய்து களையெடுக்கப்படவேண்டிய ஆறு posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[13 December 2015] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42403
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
இறையருள் நிறைக.
நமதூரை அடுத்துள்ள வடதென் ஆத்தூரில் ஆற்றில் நீரோட்டத்தை வழிமறித்து வளர்ந்து, வளைத்துள்ள,முட்புதர்,நீர்த்தாமரை,காட்டுச்செடிகொடிகள்,குப்பைகூளங்க்கள்,இன்னும் பிளாஸ்டிக் பை,பொருட்கள் அனைத்தையும் களையெடுத்து ஆழமாக்கி ஆற்றின் இருஓரங்களுட்பட வழியேற்படுத்தி, நீர்தெளிவாக வேகமாக கடல்நோக்கிச்செல்ல வழியேற்படுத்தப்படவேண்டும்.
ஆற்றையடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளை அகற்றவேண்டும் குடிநீர் உறிஞ்சப்படும் படுக்கையின் பழைய வடிகட்டிகளை அகற்றிவிட்டு புதிய படுக்கையமைக்கப்படவேண்டும்.
சுகாதரமாக வாழவும்,தூய்மையான குடிநீர்கிடைக்கவும் வெள்ள அபாயங்க்களைலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் இந்தப்பணிகளை மக்களின் பாதுகாப்பிற்காக அரசும்,ஆத்தூர்நகராட்சியால் தீவிரமாக முடுக்கிவிடப்படவேண்டும்
இப்பொழுது ஒரு எச்சரிக்கைமணியடிக்கப்பட்டுள்ளது.
ஆத்தூரின் வரலாற்றில் நமக்குத்தெரிந்து ஒருபேரிடரை சந்தித்துள்ளது வல்ல இறைவன் பாதுகாப்பானாக அதுபோல் சம்பவிக்காமலிருக்க ஆமீன்.
2. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[14 December 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42409
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆத்தூர் பாலத்தை தொடும் நீரின் அளவு ...மழை என்றாலே ஏறத்தான் செய்கிறது .....இதற்க்கான சரியான ஒரு நல்ல முடிவை எந்த ஒரு தமிழக அரசும் திறம்பட எடுப்பது இல்லையே .....காரணம் மக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லையோ என்னவோ .....
மழை காலங்களில் பொதுவாக திருச்சந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்பவர்களுக்கு உடனே ஆத்தூர் பாலத்தை நினைத்து மனதில் கொஞ்சம் பயம் வந்து விடுகிறது ......
தமிழக அரசு ஆத்தூர் பாலத்தை ஒட்டிய பகுதிகளில் பொது மக்களை கண்டிப்பாக '' குடியேற அனுமதிக்கவே கூடாது....
பொது மக்களும் சரி பின் விளைவுகளை கொஞ்சமும் நினைத்து பார்ப்பது இல்லை .....மக்களும் அரசோடு ஒத்துழைப்பது அவசியமே .....
பொது மக்களின் குடி தண்ணீராக ... மக்கள் உபயோகிப்பதால் தமிழக அரசு இந்த பாலத்தை சேர்ந்த அனைத்து பகுதிகளையும் கொஞ்சம் '' துப்புரவு '' செய்து பாதுகாத்தால் பொது மக்கள் தேவைகற்ற பல நோய்களில் இருந்தும் பாதுகாட்க படலாம் ....
இனியாவது தமிழக அரசு பொது மக்களின் நலன் கருதி ,,இந்த ஆத்தூர் பாலத்தை பற்றி கொஞ்சம் யோசிக்க வேணும் .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross