சென்னையில், KCGC வெள்ள நிவாரணக் குழுவின் சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.
இம்மாதம் 13, 14 (ஞாயிறு, திங்கள்) நாட்களில், சென்னை புறநகர்களான திருவிளங்காடு, கோட்டூர்புரம், அத்திப்பட்டு ஆகிய கிராமப்புறப் பகுதிகளில் - உணவு, உடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
திருவிளங்காடு, அத்திப்பட்டு கிராமங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
கோட்டூர்புரத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட - அனைத்து சமயங்களைச் சேர்ந்த 2500 குடும்பங்கள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தால் பட்டியலிடப்பட்டு, தலா 750 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, KCGC வெள்ள நிவாரணக் குழுவின் சார்பில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவால் இதுவரை பெறப்பட்ட அனைத்துப் பொருட்களும் வினியோகிக்கப்பட்டுவிட்டதாக, KCGC அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சொளுக்கு M.A.C.முஹம்மத் நூஹ் மூலமாக
எஸ்.கே.ஸாலிஹ்
KCGC மழை வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |