Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:47:47 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17010
#KOTW17010
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 16, 2015
நகரில் சூதாடிய 8 பேர் கைது!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4039 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ஆறுமுகநேரி காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி உள்ளிட்ட காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது, காயல்பட்டினம் கோமான்புதூர் காட்டுப் பகுதியில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

விசாரணையில் அவர்கள் காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த கபீர் (54), மெய்தீன் லெப்பை (63), குத்துக்கல் தெரு பஷீர் (52), முகம்மது இப்ராகீம் (50), மரைக்காப்பள்ளி தெரு உவைஸ் (41), சதுக்கைத் தெரு ஜாபர் (44), முகைதீன் தம்பி (63), அகமுடையார் தெரு முத்து முகம்மது (55) ஆகியோர் என்பது தெரியவந்தது. அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சூதாட வைத்திருந்த 2 ஆயிரத்து 400 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

தகவல்:
ச.பார்த்திபன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by KJ KALIFA SEYED MOHAMED (Chennai) [16 December 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42446

அகமுடையார் தெரு மற்றும் MAK தெரு(சில செய்திகளில் வருகிறது) நகரில் எந்த பகுதியில் வருகிறது. விவரம் தெரிந்தவர்கள் விளக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வெட்கக் கேடு - அசிங்கம் - அவமானம்...
posted by mackie noohuthambi (kayalpatnam ) [16 December 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 42454

காவல் நிலையம் இல்லாத ஊர் திரை அரங்கு இல்லாத ஊர் மதுக் கடை இல்லாத ஊர் என்று பெருமை பேசிக் கொள்கிறோம். தமிழகத்தின் இஸ்லாமிய தலைநகர் என்று மார் தட்டிக் கொள்கிறோம்.

முஸ்லிம்களே இந்த அசிங்கமான அவமானமான சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் காவல் துறை கைது செய்தது என்ற செய்தி உலகம் முழுவதும் காயலர்கள் வாழும் எல்லா இடங்களுக்கும் சென்று அடைந்திருக்கிறது.

அப்படியானால் மது அருந்துதல் விபச்சாரம் கூட இங்கு மறைமுகமாக நடக்க வாய்ப்பு உள்ளது என்று யார் நினைத்தாலும் அது தவறு என்று நாம் மறுத்து பேச முடியாது. வெட்கம் அவமானம் நாம் தலை குனிந்து நிற்கிறோம்.... என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

நமது உலமாக்கள் எதிர்வரும் வெள்ளிக் கிழமை ஜும் ஆ பிரசங்கத்தில் இதை வெளிப்படையாக பேசி கண்டனம் தெரிவிக்க வேண்டும். நாட்டில் மழை வெள்ளம் ஏற்பட்டு நிலை குலைந்து நிற்கும் போது பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிய முஸ்லிம் சமுதாயமா இந்த ஈன செயலையும் செய்கிறது என்று மாற்று மதத்தவர்கள் காறி உமிழும் அளவுக்கு கீழ் தரமான நிகழ்வு காயல்பட்டினத்தில் நடந்திருப்பது மனதுக்கு பெரும் அதிர்ச்சியை தருகிறது. அல்லாஹ்வின் கோபப் பார்வை நம்மீது இறங்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக. இவர்களின் செயலால் ஒட்டுமொத்த மக்களையுமே அல்லாஹ் சோதித்து விடக் கூடாது.

''அநியாயம் அட்டூழியம் நடக்கும்போது நல்லவர்களையும் அது பாதிக்குமா'' என்று நபிகள் நாயகம் அவர்களிடம் நபி தோழர்கள் கேட்டபோது ''ஆம் அநியாயம் அட்டூழியம் மிகைத்து விட்டால் - அதை பார்த்துக் கொண்டு நமக்கென்ன வந்ததென்று நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால்....உங்களையும் அந்த சோதனை விட்டு விடாது என்ற கருத்துப் பட உள்ளா ஹதீத்களை நமது உலமாக்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அல்லாஹ் பாதுகாப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [19 December 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42477

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஊருக்கு காலம் தொட்டு நடந்து வருகிற ஒரு சாபகேடு ''என்றே தான் இதை சொல்ல வேணும் ......இந்த செயலால் பிடிபட்டு வருவதும் & அவை காலம் தொட்டு வருவதும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது ......

நமது ஊரின் தன்மையை கெடுக்கின்ற ஒரு மோசமான செயல் ...இந்த நாள் நம் ஊரின் தலைகுனிவான ''பொன்னால் '''நாள் .....

இதில் ஈடுபட்டு உள்ள அனைத்து நபர்களும் பணம் பலம் படைத்த ,,நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்களும் தான் .....அதான் யாவர்களுக்கும் மன வேதனையை தருகிறது .....

இந்த மோசமான விளையாட்டு நடந்த இடமும் ,, கைப்பற்ற பட்ட பணமும் தவறான ஒரு தகவலாக தான் தெரிகிறது ......

இவை நடந்ததாக வாட் சாப் '' WHATS APP '' & FACE BOOK '' மூலமாகவும் உலகம் பூராவும் பரவியதும் குறிப்பிடத்தக்கது ..... ஊரின் ஒரு மைய பகுதியும் ,,,ஒரு செல்வாக்குமிக்க ஒரு ஜமாத்தின் அருகாமையிலும் ,,பொது மக்கள் அதிகம் நடமாடும் ஒரு பகுதி & குழந்தைகள் பாடசாலை இருப்பதும் என்பது தான் மன வேதனையும் ,,மன சங்கடத்தையும் யாவர்களுக்கும் தருகிறது ......

இவர்கள் திருந்துகின்ற காலம் எப்போதான் வருமோ ....நமது மரியாதைக்குரிய காவல் துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பாயின் ....இவர்கள் திருந்த ஒரு சான்சு உண்டு ....இல்லையேல் இவை இதே பகுதியில் மேலும் தொடர வாய்ப்பு உண்டு ....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved