டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்காக, காயல்பட்டினம் காட்டுத் தைக்கா அரூஸிய்யா பள்ளி வளாகத்தில், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம், 13.12.2015. ஞாயிற்றுக்கிழமையன்று காலை முதல் மதியம் வரை நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, நிலவேம்புக் குடிநீரைப் பெற்றுப் பருகினர். ஏற்பாடுகளை, காட்டுத் தைக்கா அரூஸிய்யா பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தகவல்களிலும், படங்களிலும் உதவி:
‘ரிஃப்அத்’ உமர்
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காட்டுத் தைக்கா அரூஸிய்யா பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|