Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:10:38 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17013
#KOTW17013
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 17, 2015
காயல்பட்டினம் தொலைபேசி நிலைய முன்னாள் கோட்ட துணைப் பொறியாளர் ஜெயக்கொடி காலமானார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3903 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையத்தில் கோட்ட துணைப் பொறியாளராக 2013ம் ஆண்டு வரை பணியாற்றிய இ.ஜெயக்கொடி, இன்று காலை 8:30 மணியளவில், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 47.

அன்னாரின் உடல், நடுநாலுமூலைக்கிணறு கிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நாளை (18.12.2015. வெள்ளிக்கிழமை) காலையில் நல்லடக்கம் நடைபெறவுள்ளது.

9.01.2002 வரை சுமார் நான்காண்டுகள் தொலைதொடர்பு இளநிலை அலுவலராகவும், 09.01.2002 முதல் 20.07.2013 வரை சுமார் பத்தரை ஆண்டுகள் கோட்ட துணைப் பொறியாளராகவும், மொத்தத்தில், 15 ஆண்டுகாலம் - காயல்பட்டினம் தொலைபேசி நிலையத்தில் பணியாற்றி வந்த இவர், 22.07.2013 அன்று தூத்துக்குடி கோட்ட பொறியாளராக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
A.K.முஹம்மது முகைதீன் (மம்மி ஹாஜியார்)


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 15:57 / 17.12.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...CONDOLENCE
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [17 December 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42458

நமதூரில் மிகவும் நல்ல முறையில் செயலாற்றியவர் அவரது சேவை மிகவும் பாராட்டுக்குரி யதாயிருந்தது அன்னாரின் மறைவு அறிந்து வருந்து கிறேன் .அன்னாரை இழந்து நிற்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [17 December 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 42459

நல்ல பண்பாளர் நகரில் நிர்வாக பணியில் நற்பெயருடன் விளங்கிய நல்ல மனிதரின் இறப்பு செய்தி அறிந்து கவலையடைகிறேன் - எனது ஆழ்ந்த இரங்கலை அன்னாரின் குடும்பத்தார்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Hameed Rifai (Jeddah (KSA)) [17 December 2015]
IP: 93.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42462

எனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் உண்மைலேயே மனது மிகவும் கணக்கிறது கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர கூடியவர் BSNL சேவையை மக்கள் விரும்பும் படி செய்தவர்

இவரின் கணிவான பேச்சுக்காகவே BSNL வாடிக்கை ஆன அநேகபேர்களில் நானும் ஒருவன்.

உயர்ந்த பதவியில் இருந்தாலும் என்றுமே அதை அவர் வெளிக்காட்டி கொள்ளாமல் கடை நிலை ஊழியன் போல உண்மையாக உழைத்தவர்.

இவரை போல நல்ல உள்ளம் கொண்டோர் இவரை பின் பற்றி சேவை ஆற்றிட வேண்டும் அதுவே அவர்க்கு செய்யும் நன்றி உன்ரவாகும்.

அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அதிச்சிக்குள்ளானேன்...
posted by M.N.L.Mohamed Rafeeq (Singapore) [17 December 2015]
IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 42464

இந்த செய்தியை இப்போதுதான் பார்த்தேன். அதிர்ச்சிக்குள்ளானேன். கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை! நிதானித்த பின் கருத்து பதிகின்றேன்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நம்ப முடியவில்லை... நெஞ்சம் கனக்கிறது!
posted by S.K.Salih (Kayalpatnam) [17 December 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 42466

இச்செய்தியை என்னால் நம்பவே முடியவில்லை... இவர் நல்ல மனதுக்கு இன்னும் பல ஆண்டுகள் பணியாற்றுவார் என ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஏராளமான காயலர்களுள் நானும் ஒருவன். இறை நாட்டம் வேறு வகையில் அமைந்துவிட்டது!

நண்பர் ஹாமித் ரிஃபாய் சொன்து போல, மிகவும் பணிவானவர் அவர். ஓர் அரசு அதிகாரி / ஊழியர் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்பதற்கு முழு இலக்கணமாகத் திகழ்ந்தவர். எனது வாழ்வில் நான் அரிதாகப் பார்த்த - விரல் விட்டு எண்ணும் அளவிலுள்ள அரசு அதிகாரிகள் வெகு சிலரில் இவர் ஒரு மணிமகுடம்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இணையதள சேவையைத்தான் பல்லாண்டுகளாகப் பயன்படுத்தி வந்தேன். அன்றாடம் எக்கச்சக்கமான குறைகள்... என்றாலும் இவர் முகத்தை முறித்துக்கொண்டு அதிலிருந்து வெளியேறுவது ஏதோ என் சொந்த அண்ணனைப் பகைத்துக்கொள்ளும் உணர்வை எனக்குத் தந்ததால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டேன். (அவர் வழியிலேயே பணியாற்றி பணி நிறைவும் பெற்ற நம்பிராஜன் அய்யா அவர்களிடமும் என்னால் வெட்டிக்கொள்ள இயலவில்லை. அவரது பணி நிறைவு நெருங்கிய காலத்தில்தான் - வேறு வழியின்றி நான் தனியார் நிறுவனத்தை நாட வேண்டியதாயிற்று!)

ஜெயக்கொடி சாரின் மரணச் செய்தியைக் கேள்வியுற்றதும், அவரது உடல் வைக்கப்பட்டுள்ள நடுநாலுமூலைக்கிணறு கிராமத்திற்குள் இன்று காலையில் வேக வேகமாகச் சென்றேன். (அங்கு செல்லும் முதல் காயலன் நானாகத்தான் இருப்பேன் என்று நினைத்துக்கொண்டு!) அங்கோ, எனக்கு முன்பாக ஏராளமான காயலர்கள் அவரது உடலைப் பார்த்துவிட்டு, கலங்கிய கண்களோடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அத்தனை பாசமானவர் இந்த ஊர் மக்கள் மீது!

ஒவ்வொரு வீட்டின் தொலைபேசி எண்ணும் அவரது நுனிநாக்கில் நிற்கும். யாராவது அவரை தொலைபேசியில் அழைத்தால், தெரிந்தவர் எனில் மரியாதையுடன் பெயர் கூறி விசாரித்துக்கொள்வார். பெயர் தெரியாவிட்டாலும், குரலைக் கேட்டதும், “சார், 280716 வீட்டுக்காரர்தானே...? இப்ப பார்த்துடுறேன் சார்” என்பார். அரசு அதிகாரிகள் ஒப்புக்குச் சொல்லும் சொல்தானே என நாம் அலட்சியமாக இருக்கும் நிலையில், ஐந்தே நிமிடத்தில் துணையாட்களுடன் நம் வீட்டுக் கதவைத் தட்டுவார்.

அவர் பதவி உயர்வு பெற்று, இந்த ஊரை விட்டும் பிரிந்தபோது, என் மனது கேட்கவில்லைதான்! ஆனாலும் அவரது வளர்ச்சியை வரவேற்காதவனாகி விடக்கூடாதே என்ற கவலையில், வேறு வழியின்றி வாழ்த்தினேன். இத்தனை சீக்கிரத்தில் எல்லோரது கண்களையும் குளமாக்குவார் என்று நான் கடுகளவும் எதிர்பார்க்கவில்லை.

(அரசு அதிகாரியாக) இவர் போல் ஒருவர் கிடைப்பதெல்லாம் குதிரைக் கொம்பான இக்காலகட்டத்தில், இவரது இழப்பை கனத்த இதயத்துடன் பொருந்திக்கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை; எமதூர் மக்களுக்கும்தான்!

அண்ணன் ஜெயக்கொடி அவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தார் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, உங்கள் துக்கத்தில் அடியேனும் பங்கேற்கிறேன்...

தாங்கொணாத் துயருடன், எஸ்.கே.ஸாலிஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [17 December 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42467

இனிய பண்பாளர். அன்பு சகோதரர் ஜெயக்கொடி அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சி. நமதூரில் பணியாற்றும் முன்பே அதாவது அவர் Engr படித்து கொண்டிருக்கும் போதே நன்கு அறிவேன். சிறந்த மக்கள் சேவகர் என்றே சொல்ல வேண்டும். நேர்மையான அதே சமயத்தில் அன்பான ஒரு அதிகாரியாக திகழ்ந்த சகோ . ஜெயக்கொடி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் பொறுமையை கொடுப்பானாக . சகோ. ஜெயக்கொடி அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினர் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by k.m.t.sulaiman (kayalpatnam) [17 December 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42468

வருந்துகிறேன். எல்லோரும் அவரை பற்றி எழுதி விட்டர்கள் .நல்ல மனிதர் என்பதறுக்கு முன்மாதறி. நல்ல பண்பாளர் .அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Sulthan (Dubai) [17 December 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42470

நல்ல ஒரு மனிதர் ... அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [19 December 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42475

கடவுள் அருள் அவருக்கு கிடைக்கட்டும் .....

எங்கள் குடும்பத்தில் ஒரு சகோதரரை இழந்தது போன்று எண்ணி ,,எண்ணி ,,உண்மைலேயே உள் மனது மிகவும் துடிக்கிறது .....நம் ஊர் மக்கள் யாராயினும் '''' BSNL '''' தொலை தொடர்ப்பு விசையமாக கூப்பிட்டால்.....உடனே கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அதை மிக துரிதமாகவே சரி செய்ய கூடியவர் ...நமது ஊரில் ....'' BSNL '' சேவையை நம் ஊர் மக்கள் விரும்பும் படி மிகவும் திறம்பட செய்து .காட்டியவர் ....அதிகமாக நம் மக்கள் '' BSNL '' தொலை தொடர்ப்பை .... இவரின் அன்பான சேவைக்காகவே வைத்தார்கள் என்பது தான் குறிப்பிடத்தக்கது .....

அன்பர் பதவி உயர்வு பெற்று வேறு ஊர் சென்ற பின்பும் நம் ஊர் மக்கள் ஒரு குறை என்று அழைத்தால் ...மனம் கோணாது ...நமது ஊர் ''BSNL '' அன்பர்களை போக சொல்லகூடிய ஒரு பண்பாளர் என்றே சொல்லலாம் ....

அருமை சகோதரர் ஜெய்கொடி அவர்களின் பண்பை ,,சொல்லவே ,,எழுதவோ முடியாத அளவுக்கு அதிகம் உள்ளது ......

இவரை போன்று நம் ஊர் ''BSNL '''மற்ற அன்பர்கள் இருக்க வேணும் என்பதே ஊர் மக்களின் எண்ணம் ......

உயர்ந்த பதவியை ஜெய்கொடி அவர்கள் பெரியதாக எண்ணியதே இல்லை ...பொது மக்களின் சேவையை தான் ...உயர்ந்த பதவியாக எண்ணியவர் என்றே சொல்லலாம் ....

இவரை இழந்து வாடும் ....அவரின் குடும்பத்தார்களுக்கு எமது ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்து ,,,கடவுள் மறைந்த அன்பரின் சொந்த ,,பந்தங்களுக்கு ,,,மன தைரியத்தை கொடுத்தருள்வானாகவும்.....

BSNL ....நிர்வாகத்துக்கும் அன்பரின் இழப்பு ,,பெரும் குறையே ......

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [19 December 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42478

அன்னாரின் மறைவு அறிந்து வருந்து கிறேன் .அன்னாரை இழந்து நிற்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச்.
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved