காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
டிசம்பர் 17, 2010 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 5301]
காயல்பட்டினம் நகராட்சிக்கு இனி நிர்வாக அதிகாரி இல்லை! புதிய ஆணையாளராக எஸ்.விஜயராகவன் பொறுப்பேற்பு!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
உள்ளாட்சி அமைப்பு விதிகளின்படி மூன்றாம் நிலை நகராட்சி வரை நிர்வாக அதிகாரியே (Executive Officer) நிர்வகிக்க வேண்டும். இரண்டாம் நிலை நகராட்சி மற்றும் அதற்கு மேல் தரமுயர்த்தப்படும் உள்ளாட்சி அமைப்புகளை ஆணையாளர் (Commissioner) நிர்வகிக்க வேண்டும் என சட்டம் உள்ளது.
காயல்பட்டினம் இதுவரை மூன்றாம் நிலை நகராட்சியாக இருந்து வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அது இரண்டாம் நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டதையடுத்து, நகராட்சியின் புதிய ஆணையாளராக கடந்த 16.12.2010 முதல் எஸ்.விஜயராகவன் என்பவரை சென்னையிலுள்ள நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் நியமித்துள்ளார்.
|