காயல்பட்டினத்தில், இன்று (18.12.2015. வெள்ளிக்கிழமை) 00.15 மணி துவங்கி, காலை 09.30 மணி வரை இடைவிடாமல் கனமழை பெய்தது. இம்மழை காரணமாக, நகரில் பெரும்பாலும் அனைத்து சாலைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
குத்துக்கல் தெருவில்...
சித்தன் தெருவில்...
தைக்கா பஜாரில்...
புறவழிச் சாலையில்...
ஐக்கிய விளையாட்டு சங்க (USC) மைதானத்தில்...
தோண்டாப்படாமல் அடுத்தடுத்து அமைக்கப்பட்ட புதிய சாலைகள் காரணமாக, பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, கழிவு நீரும், மழை நீரும் இரண்டறக் கலந்து காட்சியளிக்கிறது. சித்தன் தெருவில் ஒரு வீட்டில் கழிப்பறையுடன் கலந்து மழை நீர் வீட்டுக்குள் தேங்கியிருக்கும் காட்சிகள்:-
இன்று பெய்துள்ள கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் (வெள்ளி, சனி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள மழை பொழிவுப் பட்டியலின்படி, மாவட்டத்திலேயே காயல்பட்டினத்தில் மிக அதிகபட்சமாக 140.00 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
படங்களில் உதவி:
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன்
ஆசிரியர் ஏ.காமில்
Mofa Malik,
I.L.முஹ்ஸின் காமில்
மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|