திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் - டிசம்பர் 10, 11 நாட்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழு (NATIONAL DISASTER RELIEF FORCE), வரவழைக்கப்பட்டிருந்தது.
12.12.2015. அன்று இரவில் காயல்பட்டினம் வந்தடைந்த அக்குழுவைச் சார்ந்த சுமார் 180 பேர், சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அண்மையில் - கொம்புத்துறை (கடையக்குடி) பகுதியில் – கட்டி முடிக்கப்பட்டுள்ள, பன்னோக்கு பாதுகாப்பு மையத்தில் (MULTI-PURPOSE EVACUATION SHELTER) முகாம் அமைத்திருந்தனர். குழுவினருக்கான தங்கும் மற்றும் உணவு வசதிகளை காயல்பட்டினம் நகராட்சி ஏற்பாடு செய்திருந்தது.
வெள்ள எச்சரிக்கை காலாவதியானதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், நேற்று (17.12.2015. வியாழக்கிழமை) அதிகாலையில் திரும்பிச் சென்றனர்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், நகர்மன்ற உறுப்பினர்களான எஸ்.ஐ.அஷ்ரஃப் (01ஆவது வார்டு), ஜெ.அந்தோணி (07ஆவது வார்டு), எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் (16ஆவது வார்டு) உள்ளிட்ட நகராட்சி அங்கத்தினர் குழுவினரை வழியனுப்பி வைத்தனர். |