டிசம்பர் 23 புதன்கிழமையன்று காலை 10 மணியளவில், ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கிய “என் பெயர் பாலாறு" என்ற ஆவணப்படம் எழுத்து மேடை மையம், காயல்பட்டினம் ஏற்பாட்டில் திரையிடப்பட் உள்ளது.
இது குறித்து - எழுத்து மேடை மையம், தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான, சாளை பஷீர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
அன்பார்ந்த காயல்வாசிகளே!
நமது நகரில் வருகின்ற புதன்கிழமை (23/12/2015) காலை 10 மணிக்கு எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் “ என் பெயர் பாலாறு “
{ஆய்வு எழுத்து இயக்கம்: ஆர்.ஆர்.சீனிவாசன், தயாரிப்பு: நீர் உரிமை பாதுகாப்பு இயக்கம் சமூக செயல்பாட்டு இயக்கம்} ஆவணப்படம் திரையிடப்பட உள்ளது.
தற்சமயம் தமிழகத்தின் பல பகுதிகளை நிலைகுலைய வைத்த மழை வெள்ளப்பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க நாம் செய்ய வேண்டியது என்னென்ன என்பதைப்பற்றி விளக்கும் ஆவணப்படம்தான் “ என் பெயர் பாலாறு “.
ஆறு போன்ற நீர் நிலைகளை இயற்கை வளங்களை இறைவனின் அருட்கொடைகளை நாம் முறைகேடாக பயன்படுத்துவதன் தீங்குகளையும் பின்விளைவுகளையும் பற்றி விரிவாகப்பேசும் ஆவணப்படம் இது.
கூடுதல் விபரங்களுக்கு 9171324824 என்ற செல்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இந்த திரையிடல் நிகழ்விற்கு நீங்களும் கட்டாயம் வருவதோடு இதில் கரிசனமும் ஆர்வமும் உள்ளவர்களையும் அழைத்து வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு,
எழுத்து மேடை மையம், தமிழ் நாடு.
இடம்:
ஹனியா சிற்றரங்கம், துஃபைல் வணிக வளாகம்,
ஹாஜி அப்பா பள்ளிவாசல் அருகில்,
மெயின் ரோடு, காயல்பட்டினம்.
``````````````````````````````
காலம்:
காலை 10 மணி
புதன்கிழமை, 23/12/2015
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|