நாட்டில் கழிப்பறைகள் இல்லா வீடுகளில் - கழிப்பறைகள் அமைத்திட (INDIVIDUAL HOUSE HOLDS LATRINE; IHHL), மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த வரிசையில், தமிழகத்தில் - 2015-16 நிதியாண்டில், 83,048 கழிப்பறைகள் கட்டிட, மத்திய அரசின் மானியமாக - தமிழக அரசுக்கு, ரூபாய் 33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில் - காயல்பட்டினம் நகராட்சியில் 75 கழிப்பறைகள் கட்டிட, தலா 4000 ரூபாய் என, 3 லட்ச ரூபாயினை, சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டப்படி, ஒவ்வொரு கழிப்பிரையின் தோராய கட்டுமான தொகையாக ரூபாய் 12,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதில் - மத்திய அரசின் பங்காக 4,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது போக, மாநில அரசின் பங்காக ரூபாய் 2,000மும், நகராட்சியின் பங்காக ரூபாய் 2000மும், உரிமையாளரின் பங்காக ரூபாய் 4,000மும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த விபரம் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை எண் 105 (தேதி: 21.7.2015) இல் உள்ளது:
|