தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், வரும் 31.01.2016 அன்று திருச்சியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது. இத்தகவலைப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்காக மாநிலம் முழுவதும் அவ்வமைப்பின் கிளைகள் சார்பில் பொதுக்கூட்டங்களும், தெருமுனைப் பரப்புரைகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தெருமுனைப் பரப்புரை நிகழ்ச்சி, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் - கடைப்பள்ளி எதிரில் நடைபெற்ற பரப்புரை நிகழ்ச்சியில், ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ பரப்புரையாற்றினார். கிளை நிர்வாகிகளும், அங்கத்தினரும், பகுதி பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
ததஜ தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|