காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
டிசம்பர் 26, 2004 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்திகள் [செய்தி எண்: 510, செய்தி எண்: 511]
காயல்பட்டினம் கடல் கொந்தளிப்பு
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பல்வேறு கடலோர பகுதிகளில் கடல் கொந்தளித்தது. இதன் காரணமாக இன்று காலை 9:30 மணிக்கு காயல்பட்டினம் கடற்கரையில் பயங்கர கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் கடல் நீர் கடற்கரை ரவுண்டானா வரை வந்தது. சிங்கித்துறை, கொம்புத்துறை போன்ற கடலோர பகுதிகளில் கடல்நீர் உள்ளே புகுந்தது. இதனால் எந்த பாதிப்பும் கிடையாது.
கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு
செய்தி: மாஸ்டர் கம்ப்யூட்டர்
காயல்பட்டணம் கடற்கரையில் தொடர்ந்து கடல் அலையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அனைத்து பள்ளிகளின் ஒலிபெருக்கிகளிலும் இன்று அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை பொருட்படுத்தாமல் அங்குள்ள நிலவரத்தை பார்வையிடுவதற்கென பெண்கள் அதிகமான அளவில் திரண்டு கடற்கரைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். எனவே இதன் மூலம் கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தற்போது கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
|