காயல்பட்டினத்தில் அண்மையில் பெய்த தொடர் கனமழையால், தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளை, 22.12.2015. அன்று SDPI கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகளும், அங்கத்தினரும் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொதிகளை வழங்கினர்.
முன்னதாக, குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழை நீரைத் துரிதமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜனை SDPI காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் எஸ்.அப்துர்ரஹ்மான் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
S.அப்துர்ரஹ்மான்
(செயலாளர், SDPI காயல்பட்டினம் கிளை)
SDPI / PFI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |