காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த அபூபக்கர் என்பவர், 26.12.2015. அன்று, சஊதி அரபிய்யா ரியாதில் காலமானார். அவருக்கு வயது 44. அன்னார்,
ஸதக்கத்துல்லாஹ் - ஆமினா (ஆப்ப வியாபாரி) தம்பதியின் மகனும்,
அய்னுல் காமிலா என்பவரின் கணவரும், முஹப்பத் என்பவரின் மருமகனாரும்,
ஐக்கிய அரபு அமீரகத்தில் ப்யூர் கோல்ட் நிறுவனத்தின் மேலாளராகப் பணியாற்றி வரும் காதிர் ஸுலைமான் என்பவரின் மச்சானுமாவார்.
அன்னாரின் ஜனாஸாவை, நல்லடக்கத்திற்காக ரியாத் நகரிலிருந்து காயல்பட்டினம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலமான அபூபக்கர், ரியாதிலுள்ள தீமா எனும் உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக, 4 மாதங்களுக்கு முன்னர்தான் அங்கு சென்றதாகவும், கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து மருத்துவரை அணுகியதில், அவரது இதயத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதாகவும், தீவிர சிகிச்சைக்காக தாயகம் செல்ல முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், நிகழ்நாளன்று பணிக்கு விடுமுறை எடுத்து, தனது அறையில் ஓய்வெடுத்த நிலையில் - சக பணியாளர்கள் அவரை மரணித்த நிலையில் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படம்:
சாளை ஷேக் ஸலீம் (துபை)
சோனா அப்துல் காதிர் (ரியாத்) |