தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை துணைத்தலைவர் முத்து ஹனீஃபின் (தொடர்பு எண்: +91 81 22 77 1401) தாயார், காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவைச் சேர்ந்த சுபைதா பீவி என்ற பைதா, இன்று (19.12.2015. சனிக்கிழமை) 13.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 84. அன்னார்,
நடுவுளப்பா தலைவாசலைச் சேர்ந்த மர்ஹூம் காதிர் சுலைமான் அவர்களின் மனைவியும்,
‘சுமய்யா கிஃப்ட்’ தாவூத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை துணைத்தலைவர் முத்து ஹனீஃப், கனித்தம்பி, ஜாஃபர் ஸாதிக், ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் தாயாரும்,
நிஜாம் கரீம், முஹம்மத் ஜலீல் ஆகியோரின் மாமியாரும்,
காதிர் சுலைமான், மீரா ஸாஹிப், காதிர் சுலைமான், அப்துர்ரஹ்மான், ஷிஹாபுத்தீன், ஃபாஸில், முஹம்மத் ரய்யான் ஆகியோரின் தந்தையின் தாயாரும்,
செய்யித் இஸ்மாஈல், அப்துல் பாஸித், அப்துல்லாஹ் ஃபைஸல், இஃப்திகார் ஆகியோரின் தாயாரின் தாயாரும்,
ஸலீம், ஹனீஃப், ஆஜிம், ஜாஃபர் ஸாதிக் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (20.12.2015. ஞாயிற்றுக்கிழமை) 10.00 மணியளவில், காயல்பட்டினம் காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. |