காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
டிசம்பர் 15, 2011 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 7718]
நடுநிலைப் பள்ளியாக தரமுயர்த்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆறாம் வகுப்பு துவக்க விழா
நடுநிலைப்பள்ளியாக தரமுயர்த்தப்பட்டுள்ள ‘தைக்கா பள்ளி‘ என்றழைக்கப்படும் சிவன்கோயில்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 06ஆம் வகுப்பு துவக்க விழா நேற்று நடைபெற்றது.
கடந்த 2004ஆம் ஆண்டு வரை காயல்பட்டினம் தைக்கா தெருவிலுள்ள ஸாஹிப் அப்பா தைக்கா வளாகத்தின் பின்புறத்தில் இயங்கி வந்தது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. தைக்காவையொட்டி இப்பள்ளி அமைந்திருந்த காரணத்தால், ‘தைக்கா பள்ளிக்கூடம்‘ என்றே இப்பள்ளி அனைவராலும் அழைக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு, காயல்பட்டினம் சிவன்கோயில் தெருவில், கவ்திய்யா சங்கம் அருகில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
துவக்கப்பள்ளியாக இருந்த இப்பள்ளி, 09.12.2011 முதல் நடுநிலைப்பள்ளியாக தரமுயர்த்தி அரசாணையிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நடுநிலைப்பள்ளியான இப்பள்ளியில் 06ஆம் வகுப்பு துவக்க விழா 14.12.2011 அன்று (நேற்று) மதியம் 01.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா விழாவிற்குத் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை புனிதா அனைவரையும் வரவேற்றார்.
காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகராட்சி பணி நியமனக் குழு உறுப்பினரும் - நகர்மனற உறுப்பினரும் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் கல்விக்குழு தலைவருமான சாமு ஷிஹாபுத்தீன், திருச்செந்தூர் தொடக்கக் கல்வி உதவி அலுவலர் இரா.சுடலைமணி, அதன் கூடுதல் அலுவலர் சொக்கையா, திருச்செந்தூர் வட்டார ஊரக மைய மேற்பார்வையாளர் பொன்னழகன், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்து ஆயிஷா, ஜே.ஏ.லரீஃப் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
|