திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழு (NATIONAL DISASTER RELIEF FORCE), வரவழைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவை சார்ந்த சுமார் 180 பேர், நேற்றிரவு - காயல்பட்டினம் வந்தடைந்தனர். இக்குழுவினர், சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமீபத்தில் - கொம்புத்துறை (கடையக்குடி) பகுதியில் - கட்டிமுடிக்கப்பட்ட, பல்நோக்கு பாதுகாப்பு மையத்தில் (MULTI-PURPOSE EVACUATION SHELTER) முகாம் அமைத்துள்ளனர்.
குழுவினருக்கான தங்கும் மற்றும் உணவு வசதிகளை காயல்பட்டினம் நகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
மீட்பு குழுவிற்கான ஏற்பாடுகளை பார்வையிட - திருச்செந்தூர் கோட்டாச்சியர் மற்றும் வட்டாச்சியர் ஆகியோர் நேற்றிரவு முகாமிடத்திற்கு வந்தனர்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் - 1வது வார்டு, எஸ்.அஸ்ரப், 6வது வார்டு ஏ.கே.முஹம்மது முஹைதீன், 7வது வார்டு அந்தோணி, 10வது வார்டு பதுருல் ஹக், 13வது வார்டு எம்.எஸ்.எம்.சம்சுதீன் ஆகியோர் நிகழ்விடத்திற்கு வந்து - குழுவினருக்கு தேவையான உதவிகளை ஏற்பாடு செய்ய உதவினர்.
தேவையான உதவிகளை கிராம நிர்வாகி அதிகாரி மற்றும் தலையாரி ஆகியோரும் செய்து வருகின்றனர்.
|