சென்னையில், KCGC வெள்ள நிவாரணக் குழுவின் சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை ஓ.எம்.ஆர்.துரைப்பாக்கம் - மேத்தா கல்லூரியின் பின்புறம் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களும், துணிமணிகளும் வினியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த மேத்தா கல்லூரி ஜெய்ன் இனத்தைச் சேர்ந்தவருக்குச் சொந்தமானது என்றும், இதில் முதல்வராக ஒரு கிறிஸ்துவரும் - மருத்துவராக ஒரு முஸ்லிமும் - ஒருங்கிணைப்பாளராக ஒரு இந்துவும் பணியாற்றி வருவதாகவும், மதச்சார்பின்மைக்கு அடையாளமாகத் திகழும் இப்பகுதியில் நிவாரணப் பொருட்களைப் பெற்றுக்கொண்டவர்கள் அனைவரும் இந்து சமய மக்கள் என்றும், இப்படியொரு இடத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டது மன நிறைவைத் தந்துள்ளதாகவும், KCGC வெள்ள நிவாரணக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை மப்பேடு, அகரம் ஆகிய கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் இருளர் இனத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களும், துணிமணிகளும் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை டைடல் பூங்காவில் துப்புரவுப் பணி செய்யும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் உணவுப் பொருட்கள் - துணிமணிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களுள் பலர், தம் வீடுகளை இழந்து, இன்றளவும் ரயில் நிலையங்களில் வசித்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் தலைமைக் காவலராகப் பணியாற்றி வரும் முஸ்லிமல்லாதவரான - ஓய்வுபெற்ற டி.எஸ்.பீ. - முஸ்லிம் சமுதாய மக்களின் இந்நிவாரணப் பணிகள் குறித்து மிகவும் நெகிழ்ந்து பேசியதன் காரணமாக, அனைவர் கண்களிலும் கண்ணீர் மல்கியது குறிப்பிடத்தக்கது.
KCGC மழை வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|