சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலனுக்காக 2 லட்சத்து 57 ஆயிரத்து 350 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலாளர் ஏ.டீ.ஸூஃபீ இப்றாஹீம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ரியாத் காயல் நல மன்றத்தின் (2015) இவ்வருடத்திற்கான இறுதி மற்றும் 51-வது செயற்குழு கூட்டம் கடந்த வெள்ளியன்று (04-DEC) துணைச் செயலாளர் நோனா இஸ்மாயில் அவர்களது இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தின் கருவாக 2014-15 ஆண்டிற்கான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரின் பதவிக்காலம் முடியும்பொருட்டு நிகழ்த்தப்பட்ட இறுதி கூட்டமாக கருதப்பட்டது. ஆரம்பமாக இறை வசனம் ஓதி ஹாபிழ் SAC சாலிஹ் அவர்கள் துவக்கி வைத்தார்கள், அதனை தொடர்ந்து கூட்ட நிகழ்வை மற்றொரு துணைச்செயலாளர் முஹ்சின் அவர்கள் நெறிபடுத்த, நோனா இஸ்மாயில் அவர்கள் வந்தோரை வரவேற்க, மன்றத்தலைவர் ஹாபிழ் செய்ஹு தாவூத் இத்ரிஸ் தலைமையேற்று நடத்தினார்.
உதவிகள் வழங்கியது:
பின்னர் உதவி கேட்டு வந்த விண்ணபங்கள் ஆராய்ந்த பின்னர் 10 மருத்துவ கடிதங்களுக்கு ரூ. 1,82,000, கல்வி வகைக்கு ரூ. 10,000, சிறு தொழில் செய்வதற்கு கேட்டிருந்த எளியோருக்கு ரூ. 20,350 ஒதுக்கீடு செய்யப்பட்டது, தொடர்ந்து நமது KMT மருத்துவமனையின் வெள்ளி விழா சிறப்பு மலரின் விளம்பர உதவிக்கு ரூ.10,000 ஒதுக்கப்பட்டது.
அவசர உதவி:
அடுத்து நாம் யாவரும் அறிந்த சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு நமதூர் வழி காட்டி மையம் (KCGC) வேண்டுகோளுக்கிணங்க கூட்டத்திலேயே ரூ. 35,000 வசூல் செய்து அதை அன்றிரவே சென்றடைய வழி வகுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
2014-15 செயல்பாடுகள்:
மன்ற செயலாளர் ஸூபி இப்ராஹிம் அவர்கள் கடந்த இரண்டு வருடத்தில் நமதூர் மக்களுக்கு எந்த தேவைகளை பூர்த்தி செய்து இருக்கிறோம் மற்றும் எவ்வளவு தொகை விவரத்தை CHART வடிவில் விளக்கினர், அதோடு வருடத்தின் ஏற்ற இறக்கத்தை தெளிவாக எடுத்துரைத்தார். மருத்துவ உதவியில் அனைத்து உலக காயல் நல மன்றங்களின் உதவியை வெகுவாக சுட்டி காட்டி, நம்மன்றம் (ரியாத்) தனது அதிகப்படியான (27%) பங்களிப்பை கடந்த 2014 மற்றும் 2015ஆண்டில் தக்க வைத்திருக்கின்றது என்று தெளிவாக கூறினார். அடுத்து சிறு தொழில் மற்றும் கல்வியில் கூடுதலாக வழங்கும் திட்டங்களை இனி வரும் காலங்களில் வகுக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.
ஆலோசகர்களின் கருத்துரை:
மன்ற ஆலோசகர்கள் சகோதரர் ஹைதர் அலி அவர்கள் தற்போதுள்ள நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சேவை அளப்பெரியது என்றும், அவர்களுடைய வேகம் என்னை மெய்சிலிர்க்க வைப்பதாகவும் தெரிவித்தார். இக்குழுவே நீடித்தால் சாலச்சிறந்ததாக இருக்கும் என்று தான் கருதுவதாக கூறினார். அப்படியே மன்ற விதிகளுக்குட்பட்டு பெரிய மாற்றம் இல்லாமல் ஒரு சிறிய மாற்றம் தேவைபட்டால் மாற்றி கொள்ளவும் பரிந்துரைத்தார்.
அடுத்து MEL நுஸ்கி அவருக்கே உண்டான பாணியில் மிக தெளிவாக மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து பேசுகையில் தர்மம் பற்றிய இறை வசனம் மற்றும் நபிமொழி கூறி விளக்கி பேசினார்.
பொறியாளர் SMA சதகத்துல்லாஹ் அவர்கள் நம்மன்ற செயல்படுத்துகின்ற புறநகர் பள்ளிகளுக்கு உதவும் திட்டம் மிக அருமையான திட்டம் என்றும், இக்காலத்திற்கு ஏற்றார் போல் சமய நல்லிணக்கம் உருவாக ஒரு எடுத்துகாட்டாக அமையும் என்று கூறினார்.
பின்னர் சகோதரர் கூஸ் அபூபக்கர் அவர்கள் மன்ற செயல்பாடுகளில் நிறை மற்றும் குறை ...அல்ல! அல்ல! (சிறு மாற்றம்) என்ன என்பதை அவரின் நகைச்சுவை தன்மையோடு அழகாக விளக்கினர். முன்னர் சகோதரர் ஹைதர் அலி கூறிய (நிர்வாகக்குழுவில் பெரிய மாற்றம் தேவையில்லை) என்ற கருத்தை முழுமையாக அமோதிக்கிறேன் என்று தெரிவித்து கொண்டு நம்மன்றம் எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரித்தது மிக... மிக... மிக... குறைவு என்றும், ஏறக்குறைய 95% விழுக்காடு வின்னபங்களும் ஒப்புதல் அளிக்கப்பட்டு விடுகிறது என்றார். அதன் பின்னர் சிறு தொழில் முனைவோரை கண்டறிந்து ஊர் பிரதிநிதி உதவியோடு நாமாகவே முன் சென்று அமைத்து கொடுக்கவும் வலியுறுத்தினார்.
மேலும், சிறு தொழில் உதவி வகைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கில், சிறு தொழில் முனைவோரை ஊர் பிரதிநிதி உதவியோடு கண்டறிந்து நாமாகவே முன் சென்று அமைத்து கொடுக்கவும் வலியுறுத்தினார். இதை நமது துணைப்பொருளாளர் வெள்ளி சித்திக் அவர்கள் ஆமோதித்து பேசுகையில், ரமலான் உணவுபொருள் பெறும் பயனீட்டாளர்களை கண்டறிந்து சிறுதொழில் முனைய ஆர்வப்படுத்தினால் இன்ஷா அல்லாஹ் அவர்கள் ஓரளவு தன்னிறைவு பெறுவார்கள் என்ற நோக்கில் தெரிவித்தார்.
மேலும் சகோதரர் கூஸ் அபூபக்கர் கூறுகையில், மன்ற உறுப்பினர்கள் விடுப்பில் தாயகம் செல்கையில், நம் பிரதிநிதி தர்வேஷ் அவர்களை சந்தித்து அவருடன் சேர்ந்து நலிந்தோரை சந்திப்பது, மற்றும் சகோதரர் தர்வேஷ் அவர்களிடம் கருத்து பரிமாற்றம் செய்துகொள்வது, காயலின் இன்றைய சூழலை நேராக அறிந்து கொள்ளவும், அவர்களின் குறைகளை அகற்ற அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவும் உதவும் என்று கேட்டு கொண்டார். மேலும், நமது செயல்பாடுகளின் வெற்றிக்கு பின்னணியில் நமது பிரதிநிதி சகோதரர் தர்வேஷ் அவர்களின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் இன்றியமையாதது என்று குறிப்பிட்டார்.
தலைமையுரை:
எம்மன்ற தலைவர் ஹாபிழ் செய்ஹு தாவூத் இத்ரிஸ் அவர்கள் மன்றத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பற்றிய செயல்பாடுகள் குறித்து அனைவருக்கும் புகழாரம் சூட்டினார்.
நமது ஒற்றுமையே இதன் பலம் என்றும், நாம் பல கருத்துகளால் பிரிந்தாலும் RKWA என்று வரும்போது ஒரே குரலாக அதை கனத்த குரலாக தெறித்த வெளிப்பாடே இத்தனை உதவிகளை நமதூர் மக்களுக்கு செம்மையாக செய்ய முடிந்திருக்கின்றது. கடந்த வருடங்களை போல் இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களிலும் இதே சிறப்போடு செயல்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
பின்னர் மன்றபொருளாலர் ஹசன் அவர்களின் சேவை அளப்பெரியது என்றும் மற்றும் சகோதரர்கள் சூபி இப்ராகிம்,முஹ்சின், வெள்ளி சித்திக், லால்பேட்டை நாசர் அவர்களின் உயரிய பணி மகத்தானது என்றார். அடுத்து மூத்த உறுப்பினர்கள் நயீமுல்லாஹ், ஹாபிழ் PSJ ஆப்தீன் சேவை மறக்க இயலாது என்றும் புகழுரைத்தார். மன்றத்தின் ஊடக குழு பிரிவினரையும் வெகுவாக பேசி அவர்கள் தங்களின் பொன்னான காலத்தை மன்றத்திற்கு ஒதுக்கி காலநேரத்திற்குள் நமதூர் இணைய தளத்திற்கு மன்ற செய்திகள் சென்றடைய வழி செய்யகூடியவர்கள் என்று பேசினார். இறுதியாக அடுத்து வரும் நிர்வாகத்திற்கும் இதே ஒத்துழைப்பை நல்கிடுமாறு கேட்டுக்கொண்டார்.
பார்வையாளர்கள் கருத்து:
இக்கூட்டத்தின் பார்வையாளர்களாக பொதுக்குழு உறுப்பினர் ஆஷிக் ரஹ்மான் மற்றும் புதிதாக ரியாத் மாநகரம் வந்துள்ள உமர் அப்துல் காதர் தங்களது கருத்தை தெரிவிக்கையில் விண்ணபங்களை கையாளும் திறன் மற்றும் உதவித்தொகை ஒதுக்கீடு மிக அருமையாக இருக்கிறது, அதோடு நான் பங்காற்றிய மன்றங்கள் சந்தா தொகையை வைத்தே நிதியை ஒதுக்குவார்கள், ஆனால் இங்கு அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் நன்கொடையின் மூலமாகவும் சிறப்பாக செய்கிறோம் என்றார். மற்றொருவர் இது ஒரு புது அனுபவம் செயற்குழுவில் கலந்து கொண்டது மிக சிறப்பாக இருந்தது, உங்களுடைய ஒற்றுமை மற்றும் பங்களிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது என்றும், இன்ஷா அல்லாஹ் நானும் இந்த மன்றத்தில் என்னை இணைத்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றுவேன் என்றார்.
கூட்ட அமைப்பாளர்கள்:
இந்த 51-வது செயற்குழுவின் ஒருங்கினைப்பாளர்கலான வெள்ளி சித்திக், நோனா இஸ்மாயில், நயீமுல்லாஹ் மற்றும் கூஸ் அபூபக்கர் அவர்களின் அனுசரணையில் நெய்ச்சோறு / காயல் களரியுடன் விருந்துபசாரம் அளிக்கப்பட்டது.
இறுதியாக மன்ற துணைத்தலைவர் AH முஹம்மது நூஹ் அவர்கள் நன்றி நவில ஹாபிழ் PSJ ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் துஆ ஓத, குழுப்படம் எடுத்த பின்னர் கூட்டம் சிறப்பாக முடிவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
குறிப்பு: எம்மன்றம் 2015 ஆண்டில் நகர் நலனுக்காக செய்திட்ட முழு விபரங்கள் தனி செய்தியாக பின்னர் வெளியிடப்படும். வஸ்ஸலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ரியாதிலிருந்து...
N.M.செய்யித் இஸ்மாயீல்
ஹாபிழ் S.A.C.சாலிஹ்
செய்தித் தொடர்பாளர்கள் - ரியாத் கா.ந.மன்றம்
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய (50ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |