ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் தேசிய நாள் விடுமுறையில், அங்குள்ள காயலர்கள் உல்லாசப் பயணம் சென்று வந்துள்ளனர். இதுகுறித்து பயணக்குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
அமீரகத்தின் தேசியதினம் எல்லா வருடங்களிலும் டிசம்பர் 2 ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே. அதேபோல் இவ்வருடமும் மொத்த அமீரகமும் இந்த நாளை எதிர்பார்த்து களை கட்டிக்கொண்டிருந்தது. எமன் நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் போரில் தங்களின் உயிர்களை நாட்டிற்காக அர்ப்பணித்த அமீரக போர் வீரர்களை கௌரவிக்கும் பொருட்டு டிசம்பர் 1 ஆம் தேதி ஷஹீத்கள் விடுமுறையாக அனுஷ்டிக்கப்பட்டு மொத்தம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும் அமீரகத்தில் தற்போது மிகவும் தட்பவெப்ப நிலை நிலவிவரும் இந்த காலகட்டத்தில் விளக்கு தாவூத் ஹாஜி, சாளை ஷேக் சலீம் மற்றும் யஹ்யா மொஹிதீன் தலைமையில் அமீரகத்தின் பல பகுதிகளிலும் வசிக்கும் சுமார் 80 காயலர்கள் (பெரியோர் சிறியோர் உட்பட) டிசம்பர் 2 ஆம் தேதி ராஸ் அல் கைமா என்ற நகருக்கு இன்ப சுற்றுலா ஏற்பாடு செய்த படி 2 டிசம்பர் அன்று காலை 9:30 மணிக்கு அல் தவார் ரில் இருந்து பேருந்து புறப்பட்டு இடையில் சிற்றுண்டிக்காக நிறுத்தப்பட்டு ராஸ் அல் கைமா வில் அமைந்துள்ள அல் சகர் பூங்கா வை சென்றடைந்தது.
பூங்காவை சென்றடைந்ததும் சிறார்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று அந்த இடமே களை கட்ட தொடங்கிவிட்டது. காரணம் இப்படி பட்ட இன்ப சுற்றுலா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளிற்கு பிறகு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதிய உணவாக மன மணக்கும் வேலூர் தம் பிரியாணி தயிர் சட்டினி மற்றும் குலாப் ஜாமூன் பரிமாறப்பட்டது.
சிறார்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் எல்லா சிறார்களுக்கும் வழங்கப்பட்டது.
பெண்டிருக்கு மார்க்க மற்றும் பொது அறிவு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது. பெண்களுக்கான விளையாட்டு நிகழ்சிகளை வாவு நபீசா முபாரக் மற்றும் ஹசீனா ஹாத்தூன் சலீம் நெறிபடுத்தினார்கள். அசர் தொழுகைக்குப்பின் தேநீர் வழங்கப்பட்டு. மக்ரிபிர்க்குப்பின் தடபுடலாக பார்பிகிவ் (barbecue) விற்கு உண்டான வேலைகள் தொடங்கி தணலில் சுட்ட கோழி மற்றும் அராயிஸ் என்னும் அரபி உணவு சுட சுட வந்திருந்த மக்கள் அனைவரும் மன திருப்தி யோடு சாப்பிட்ட பின்னர் இரவு 9 மணி அளவில் சிறப்புடன் இல்லம் திரும்பினோம்.
03 டிசம்பர் அன்று கிட்டத்தட்ட பத்து குடும்பத்தார்கள் ஃபுஜைரா நகரில் உள்ள கல்பா கடற்க்கரை பூங்கா விற்கு சென்றும் 04 டிசம்பர் அன்று ஷார்ஜா வில் அமைந்துள்ள நேசனல் பார்க்கிற்கு சென்றும் பொழுதை இன்பமாக களித்தனர். எல்லாப்புகழும் அல்லாஹ்விற்க்கே !!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross