செய்தி எண் (ID #) 17000 | | |
செவ்வாய், டிசம்பர் 15, 2015 |
இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரின் சகோதரி காலமானார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 3361 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய |
|
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கரின் (தொடர்பு எண்: +91 95000 35786) சகோதரி - காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா கே.ஏ.எம்.செய்யித் ஃபாத்திமா, இன்று (டிசம்பர் 15 செவ்வாய்க்கிழமை) 05.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 51. அன்னார்,
மர்ஹூம் அல்ஹாஜ் குளம் லெப்பைத் தம்பி அவர்களின் மகன் வழிப் பேத்தியும்,
மர்ஹூம் அல்ஹாஜ் தைக்கா உமர் அவர்களின் மகள் வழிப் பேத்தியும்,
ஹாஜி கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீனின் மகளும்,
கே.ஏ.எம்.தைக்கா உமர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், ஹாஃபிழ் கே.ஏ.எம்.முஹம்மத் உதுமான் ஆகியோரின் சகோதரியுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 15.30 மணியளவில், காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன் மூலமாக
எஸ்.கே.ஸாலிஹ் |