உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்த - சுமார் 400 ஆண்டு கால பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித், 1992ஆம் ஆண்டு டிசம்பர் 06ஆம் தேதியன்று இந்துத்துவ அமைப்பினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் டிசம்பர் 06ஆம் நாளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பல்வகைப் போராட்டங்களும், கருத்தரங்கங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
06.12.2015. ஞாயிற்றுக்கிழமையன்று, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகில், “கருஞ்சட்டையணிந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்”, தமுமுக மாவட்ட செயலாளர் யூஸுஃப் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இணைச் செயலாளர் ஜோஸப் நொலாஸ்கோ, அதன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஆஸாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், காயல்பட்டினத்திலிருந்து எம்.ஹஸன், எம்.கே.ஜாஹிர், எஸ்.டீ.இப்றாஹீம், ஐதுரூஸ், ஷம்சுத்தீன், ‘முர்ஷித்’ கே.முஹ்ஸின் உள்ளிட்ட - தமுமுக / மமக மாவட்ட மற்றும் நகர கிளை நிர்வாகிகளும், அங்கத்தினரும், மாவட்டத்தின் அனைத்து கிளைகளைச் சேர்ந்த அங்கத்தினரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாள் என்பதால், காயல்பட்டினத்தில் அன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தமையும், வாடகை வாகனங்கள் இயங்காமையும் குறிப்பிடத்தக்கவை.
தகவல் & படங்கள்:
‘முர்ஷித்’ K.முஹ்ஸின்
கடந்தாண்டு (2014) டிசம்பர் 06 அன்று தமுமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தமுமுக / மமக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|