சென்னை மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தன்னார்வலர்கள் தேவைப்படுவதாகவும், விருப்பப்படுவோர் முன்வருமாறும், KCGC மழை வெள்ள நிவாரணக் குழு அழைத்துள்ளது. இதுகுறித்து KCGC தலைவர் ஆடிட்டர் ரிஃபாய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:-
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காயல்பட்டினம் மக்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையத்தின் சார்பில் வெள்ள நிவாரணக் குழு நியமிக்கப்பட்டு, தன்னார்வத்துடன் விருப்பம் தெரிவித்த உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனியார்வலர்களையும் ஒருங்கிணைத்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிதி திரட்டும் பணிகள், திட்டமிடல், நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்டோருக்கு வழங்கல் என 3 துறைகளாக இப்பணிகள் வகைப்படுத்தப்பட்டு செய்யப்பட்டு வருகிறது.
நிவாரணப் பொருட்களைப் பாதிக்கப்பட்டோருக்கு வினியோகிப்பதற்காக, தன்னார்வச் சேவகர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றனர். இப்புனிதமான பணிகளை தம் சொந்தச் செலவில் செய்ய ஆர்வமுள்ள - சென்னையில் வசிப்போரும், சென்னைக்கு வெளியே வசிப்போரும் உங்கள் விருப்பத்தை
(1) சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ் (+91 93828 08007)
(2) குளம் முஹம்மத் தம்பி (+91 98401 84838)
ஆகியோருள் ஒருவரிடம் தெரிவித்து, அல்லாஹ்வுக்காக சேவையாற்ற வருமாறு KCGC வெள்ள நிவாரணக் குழு சார்பாக அன்போடு அழைக்கிறேன்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நம் யாவரின் உளத்தூய்மையான சேவைகளையும் தனதருளால் ஏற்று, ஈருலக நற்பேறுகளை நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |