காயல்பட்டினம் நகராட்சியில் நடந்து வரும் பல்வேறு முறைக்கேடுகள் குறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கம், சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை
அனுப்பிய மனுவின் மீது நடவடிக்கை எடுக்க - தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறை, நகராட்சி நிர்வாகத் துறையினை கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து - ஊழல் எதிர்ப்பு இயக்கம், சென்னையின் காயல்பட்டினம் கிளை சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் நகராட்சியில் நடந்து வரும் பல்வேறு முறைக்கேடுகள் குறித்து ஊழல் எதிர்ப்பு இயக்கம், சென்னை அமைப்பின் காயல்பட்டினம்
கிளை, இவ்வாண்டு செப்டம்பர் மாதம் -
(1) தமிழக அரசின் தலைமை செயலர்
(2) தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மை செயலர்
(3) சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் இயக்குனர்
(4) தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர்
(5) தமிழக அரசின் உள்ளாட்சி மன்றங்களின் தணிக்கை துறையின் இயக்குனர்
(6) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
(7) திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் மண்டல இயக்குனர்
ஆகியோருக்கு விரிவான மனுவினை சமர்ப்பித்திருந்தது.
இதற்கு பதில் வழங்கியுள்ள தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை,
காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் மற்றும் பிறர் மீதான புகாரினை, தமிழக அரசின் MEMO NO.1356/64/2, PUBLIC (SERVICES-B)
dated 8.4.1964 - படி, நகராட்சி நிர்வாகத்துறை மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்க, சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின்
இயக்குனருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால், ஊழல் எதிர்ப்பு இயக்கம், சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை மூலமாக,
நினைவூட்டல் மனு - மேலே தெரிவிக்கப்பட்டுள்ள 7 தரப்புக்கும் - தற்போது அனுப்பப்பட்டுள்ளது.
இதன் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை மூலமாக நடவடிக்கை எடுக்க கோர,
பொது நல வழக்க தாக்கல் செய்ய ஊழல் எதிர்ப்பு இயக்கம், சென்னையின் காயல்பட்டினம் கிளை முடிவு செய்துள்ளது என்பதனை தெரிவித்து
கொள்கிறோம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |