தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. கடலூர், சென்னை நகரங்களில் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுமுகமாக பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில், முஸ்லிம் சமுதாய அமைப்புகள் பல்வேறு அமைப்புகள் முனைப்புடன் களப்பணியாற்றி வருகின்றன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், அதன் கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் சென்னை முழுக்க களப்பணியாற்றி வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக, மாநிலம் முழுவதுமுள்ள அதன் கிளைகளிலிருந்து நிதி திரட்டி தலைமையகத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் நகர கிளை சார்பில், நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் நிதி திரட்டும் பணி துவங்கியது. அதன் தொடர்ச்சியாக, வாடகை வாகனத்தில் அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 25 பேர் தெருத்தெருவாகச் சென்று நிதியுதவிகளையும், உணவு - உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் திரட்டி வருகின்றனர்.
இதுவரை திரட்டப்பட்ட 2 லட்சத்து 79 ஆயிரத்து 861 ரூபாய் தொகை, உணவுப் பொருட்கள், உடைகள் ஆகியன - விரைவில் மாநில தலைமையகம் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேர்க்கப்படவுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |